கொரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவையில்லை

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இனிமேல் மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என டெல்லி அரசு இன்று புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

டெல்லியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

பரிசோதனை மேற்கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வழங்கும் படிவத்தை நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் டெல்லியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என தல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

மேலும், கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களிடம் மருந்துவர் பரிந்துரையைக் கேட்கக் கூடாது என டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக இன்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்