யாழ்.சாவகச்சேரி சுகாதார தொழிலாளர்கள் மீது தாக்குதல்

யாழ்.சாவகச்சேரி நகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று(14) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி டச்சு வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் குப்பைகள் தரம்பிரித்து வைக்கப்பாடாமை தொடர்பில் இருதரப்புக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுதாதார தொழிலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான தொழிலாளிகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வ.விஜிதரன்(19),ஆனந்தராஜ்(19) ஆகியோரே தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்