நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர் ஹொங்கொங்கில் இருந்து நாடு திரும்பியவர் எனவும், ஏனையவர்களில் ஒருவர் லிபேரியாவிலிருந்தும் மற்றையவர் பஹ்ரைனில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்