மழையுடனான வானிலையால் மரக்கறி விற்பனையில் சிக்கல்

அதிக மழையுடனான வானிலையால் மரக்கறி விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அதிக மழையினால் நுகர்வோர், மரக்கறி கொள்வனவில் ஈடுபடும் வீதம் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மெனிங் சந்தையின் வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ கரட் 100 தொடக்கம் 130 ரூபாயிற்கும் லீக்ஸ் ஒரு கிலோ 50 ரூபாயிற்கும் முள்ளங்கி ஒரு கிலோ 50 தொடக்கம் 60 ரூபாயிற்கும் கோவா ஒரு கிலோ 70 தொடக்கம் 80 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்