நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.
இன்றுமட்டும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களில், பிரித்தானியா மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 12 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 100 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்னும் 185 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 12 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 100 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்னும் 177 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
