கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட மனித உடல் உறுப்புக்கள்

விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக

ஆங்கில ஊடகமொன்றின் தகவல் தெரிவிக்கின்றது.

நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) உலங்கு வானூர்தி ஊடாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை விமானப்படைக்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்