தலையில் சுடப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

தலையில் சுடப்பட்ட காயத்துடன் சிறுத்தை புலியொன்றின் சடலமொன்று மஸ்கெலியா ப்ரவன்லோ தேயிலை தோட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுத்தை புலியின் சடலம் நேற்று (22) கண்டு பிடிக்கப்பட்டதாக நல்லதன்னி வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான ப்ரவன்லோ தேயிலை தோட்டத்தின் பாடசாலைக்கு மேல் பகுதியில் சிறுத்தை புலியொன்றின் சடலமொன்று உள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் சிலரால் நல்லதன்னி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தை புலியின் சடலத்தை மீட்டுள்ளனர்

ஆசிரியர்