கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில், 07 பேர் குவைத்தில் இருந்தும் இருவர் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் இந்தியா மற்றும் கந்தக்காடு தனிமைப்படுதலில் இருந்த தலா ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 18 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 118 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 181 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்