Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

பதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ்

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை உலுக்கிய கொரோனா, தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து...

பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி..

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ்...

ஆடை விற்பனையக வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி

நீர்கொழும்பு- மாநகர சபை அங்காடி கடைத்தொகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம்‌ அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்‌ அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும், உணவுப்‌ பொருட்கள் விற்பனை செய்யும்‌ வர்த்தக நிலையங்கள்‌ மற்றும்‌ மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் பராமரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று...

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

டெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ளல் வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் தற்போது யாழ்...

ஆசிரியர்

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது. – சிறீதரன்


  ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் இன்றைய தினம் பாராளுமன்றில்  தேர்தல் ஆணைக்குழுவுடைய செயலாற்றுகை தரம் கணிப்பீட்டு அடிப்படையிலே கொண்டுவரப்பட்ட இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையில்  உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் 

மிக முக்கியமாக தேர்தல் ஆணைக்குழு பற்றிய பல்வேறுபட்ட கருத்துக்கள் இந்த சபையிலே பல உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.
மகிந்த தேசப்பிரிய அவர்கள் தலைமையிலே தேர்தல் ஆணைக்குழு மிக நீதியாக, நேர்மையாக இந்த நாட்டிலே நடந்திருப்பதாகத்தான் பல்வேறுபட்ட தகவல்களும் ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான இந்த ஆய்வு நடவடிக்கைகளின் போது தான் இன்று யாழ்ப்பாணத்தில் கூட தேர்தல் நடைபெறுகின்ற காலத்திலேயே ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மக்களுக்கென நிவாரணமாக வழங்கப்பட  வந்த பொருட்களை தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் யாழ்ப்பாண செயலகத்திலே வைத்து வழங்கியிருந்தார்.

அதனை வெளியிலே கொண்டுவந்தது தேர்தல் ஆணைக்குழு, குறித்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த இரட்ணஜீவன் கூல் அவர்கள் தான் அதனை வெளிப்படையாக வெளியிலே சொல்லி இருந்தார். இதனைவிட ஒரு நியாயபூர்வமான, நீதியான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக நீண்ட கால அனுபவம் கொண்ட தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலமையிலே குறித்த குழு மிக நேர்மையாக, நேர்த்தியாக செயற்பட்டிருந்தது. அதனை யாருமே இந்த இடத்தில் நாவடிக்கமுடியாது.

இங்கே நான் சில கௌரவ உறுப்பினர்களுடைய கருத்துக்களை செவிமடுத்தேன் இரட்ணஜீவன் கூல் மீது ஒரு தனிப்பட்ட கோவம் அல்லது அவர் மீது ஆத்திரம் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.

இரட்ணஜீவன் கூல் அவர்கள் இந்த தேர்தலிலே ஊழல் நடைபெறக்கூடாது, நியாயத்துக்கு புறம்பாக ஊழல் நடைபெறக்கூடாது, ஊழல் வாதிகளை அல்லது இந்த மக்களை ஏமாற்றுகின்றவர்களை நிராகரியுங்கள் என்று அவர் சொல்லியிருந்தால் அது நியாயமானது. ஆனால் தேர்தலிலே வாக்களிக்கவேண்டும் என்று அவர் மக்களை எந்த காலத்திலுமே எங்குமே அவர் சொன்னதாக நான் அறியவில்லை.

அப்படி சொல்லியிருந்தால் இந்த உயர்ந்த சபையின் ஊடக நீங்கள் வெறுமனே பொய்களை சொல்வதை விட அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் ஆணைக்குழு அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,இவ்வளவு காலங்களும் நடைபெற்ற விடயங்களிலே தேர்தல் ஆணைக்குழு அவரை ஏற்றுக்கொண்டிருக்கின்றது . அவருடைய செயற்பாடுகளை மதித்திருக்கின்றது. அவருடைய எண்ணங்களுக்கு இசைந்து போய்த்தான் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஆகவே அவர் சரியாக நடந்திருக்கிறார், அவர் சரியாக நடந்த காரணத்தினால் தான் பல்வேறுபட்ட நபர்களுடைய ஊழல்களையும், அவர்களுடைய ஒழுக்கமற்ற நடவடிக்கைகளையும் அவர் வெளியிலே கொண்டுவந்திருந்தார்.

அவர் மிக உயர்ந்த ஒரு பேராசிரியர்.அவர் உலக ரீதியிலே போற்றப்படுகின்ற ஒரு கல்விமான், அவ்வாறான ஒருவர் தமிழராக இந்த தேர்தல் ஆணைக்குழுவிலே அவர் இருந்திருக்கிறார் என்பதுதான் நான் நினைக்கிறேன் சில உறுப்பினர்களுக்கு மிகக்கூடிய வேதனையாக இருந்திருக்கலாம். ஏனென்றால் ஒரு உயர்ந்த கல்விமானை அவ்வாறு ஒரு தேர்தல் ஆணைக்குழுவிலே வைத்திருந்தது அவர்களுக்கு பிரச்சனையாக இருந்திருக்கலாம்.

ஆனால் இந்த நாட்டிலே இந்த தேர்தல் முறையிலே பல்வேறுபட்ட பிரச்சனைகள் இருந்திருக்கலாம். ஒரு கட்சிக்குள்ளேயே பல பேர் சூடுபட்டிருக்கிறார்கள், இறந்திருக்கிறார்கள். விருப்பு வாக்குகளுக்காக பலர்  கோடிக்கணக்கிலே செலவழித்திருக்கிறார்கள்.

இங்கே இந்த பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றிய கௌரவ   உறுப்பினர் அவர்கள் சொன்னார் இந்த தேர்தல் முறையிலே இனிமேல் பணமில்லாதவன் மக்களுக்காக சேவை செய்ய முடியாது, பணமில்லாதவன் இந்த தேர்தலிலே ஈடுபட முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.அது உண்மையான ஒரு விடயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கே இந்த நாட்டிலே பணமிருந்தால் மட்டும்தான் தேர்தலிலே காசுகளை கொட்டி அல்லது சாராய போத்தல்களை இறக்கி தேர்தலிலே வெல்ல முடியும் என்பதை பலர் நிரூபித்திருக்கிறார்கள்.

இன்று யாழ்ப்பாணம் அரச செயலகத்தை தன்னுடைய சொந்த அரசியல் செயலகம் போன்று மாற்றியிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறுதான் நடந்துகொண்டார் என்பதற்கு பல்வேறுபட்ட உதாரணங்கள், செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதனை விசாரிப்பதற்கு இந்த நாட்டிலே யாருமில்லை. ஊழல் நடந்ததை சொல்வதற்கு திராணியில்லை.

குறிப்பாக நீங்கள் பாருங்கள் இந்த நாட்டிலே ஒருபக்கம் அரசாங்கத்தினுடைய ராஜபக்ச குடும்பத்தினுடைய உறுப்பினர்கள் ஆட்சியிலே இருக்கிறார்கள். அதே நேரம் யாழ்ப்பாணத்திலே இப்பொழுது யாழ்ப்பாண அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற போர்வைலும்  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற போர்வைலும் 

அரச செயலகம் இன்று ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாக
மாற்றப்பட்டிருக்கிறது. இது மிக மோசமானதொரு நடவடிக்கை. இதனை சொல்லுவதற்கு திராணியில்லாதவர்கள் அதனை சொன்ன இரட்ணஜீவன் கூல் மீது நீங்கள் ஏன் கோவம் கொள்கிறீர்கள்?  தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். நியாயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

நடைபெறுகின்ற உண்மைகளை மறைக்காமல் நீதியான வழியிலே ஒரு      தேர்தல் நடைபெற வேண்டும், நீதியான முறையிலே இந்த நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் முதலிலே உங்களுக்கு வரவேண்டும். நாங்கள் எதையும் இனவாத கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது.எதனையும் நாங்கள் இனவாத ரீதியாக சிந்திக்க கூடாது.

இரட்ணஜீவன் கூல் ஒரு தமிழன் எ ன்பத்திற்காக அவர் தன்னுடைய நியாயங்களை சொன்னதற்காக அவர் மீது இங்கு பலர் வசைமாரிகளை பொழிந்தீர்கள். ஆனால் அவருடைய கல்வி தன்மை, அவரிடம் உள்ள ஆற்றல், அவருக்கு இருக்கிற ஆங்கில அறிவும்,அவரிடம் உள்ள கெட்டித்தனத்தையும், நீங்கள் முதல் மதிக்கப்பழகுங்கள்.

அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதல்ல .அவர் தமிழர்களுக்கு சாதகமாக இருந்தாரா? பாதகமாக இருந்தாரா? என்பதல்ல ஆனால் இந்த சபையிலே ஒரு தமிழன் தூற்றப்படுகின்ற பொழுது, பிழை இல்லாமலே பிழை சொல்லப்படுகின்ற பொழுது நாங்கள் பேசாமல் இருப்பதும் ஒரு காலத்தின் தவறு. ஆகவேதான் நான் இந்த பதிவை மேற்கொள்கிறேன். அன்புக்குரிய சிங்கள சகோதரர்களே! முதல் நீங்கள் உண்மையை புரிந்து நேமையின் பக்கம் கதைத்தவர்களை, எவர் சொல்லும் கருத்துக்களிலும் பிழை இருந்தாலும் அந்த உண்மைகளையும் இந்த இடங்களிலே சொல்வதற்கு நீங்கள் தயங்கக்கூடாது.

உண்மையில் இரட்ணஜீவன் கூல் பிழை செய்திருந்தால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அல்லது வெளிப்படையாக அவர் அதனை சொல்லியிருக்க வேண்டும்.

சொல்லாத இடத்திலே இந்த சபையிலே இரட்ணஜீவன் கூல் இல்லாத இடத்திலே அந்த பேராசிரியரை பற்றி நீங்கள் பேசுவது உங்களுடைய தகுதியை உங்கள் இனத்தினுடைய தன்மையை நீங்கள் குறைப்பதாக அமையும்   என தெரிவித்தார் 

இதையும் படிங்க

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது...

அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை காலாவதியானது

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா....

குழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம்

இலவச வைஃபை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உங்கள் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் போதும் என சுவிட்சர்லாந்து நிறுவனம் விளம்பரம் செய்தது.சுவிட்சர்லாந்தை சேர்ந்த ட்விஃபி...

தொடர்புச் செய்திகள்

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஹர்த்தாலுக்கும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அறைகூவல் விடுத்துள்ளார்  இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்...

எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது!சிறீதரன்

எமது மண்ணினதும் இனத்தினதும் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கோ மாற்றுவதற்கோ நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.தம்பகாமம் பகுதியில் மக்களுடனான...

போர்க்காலம் போல இப்போது பகிர்ந்துண்ணுவோம்: எஸ். ஸ்ரீதரன்

யுத்தகால அனுபவத்தைக் கொண்டு பட்டினியிலும், கொடூர நோயிலிருந்தும் விடுபடுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டுமெனவும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது...

அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....

மேலும் பதிவுகள்

நவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும். ரட்டாசி மாத அமாவாசைக்கு பின்...

அட்டகாசமான சுவையில் பன்னீர் பெப்பர் பிரை

தேவையான பொருட்கள் பன்னீர் - 200 கிராம் சோளமாவு - 25 கிராம்தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு நறுக்கியது...

ரிஷாட் மறைந்திருக்கும் இடம்குறித்து வெளிப்படுத்தினார்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் ஒருவரின் வீட்டில், ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்ககூடும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு அவசியமா

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது பராமரிக்கும் ஓர் உடல் செயல்பாடே உடற்பயிற்சி. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. நீங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம், உடல் பருமன்,...

இலங்கையின் ஆடைஏற்றுமதி வருமானம் பெரும் வீழ்ச்சி!

2020 ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 22 வீதம் குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

10 லட்சத்து 90 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித...

பிந்திய செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

துயர் பகிர்வு