ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் படி காணி பத்திரம் கிடைக்கும்

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் படி உரிமைப்பத்திரம் இன்றி காணியில் வாழ்கின்ற மக்களுக்கான காணி பத்திரம் கிடைக்கும் என்று
முல்லைத்தீவு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்கழு தலைவரும்,

நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.(27.09.2020)

இதன்பொது அவர் பேசுகையில்..
கட்சியினை குறுகிய காலத்தில் உருவாக்கி பாரிய வெற்றியினை பெறவைத்த தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க அவர்கள் எல்லாம் சேர்ந்து எனக்கு,

மாவட்ட அபிவிருத்திகுழு என்ற பதவி தந்துள்ளார்கள் இதனை உபயோகித்து நிலையான அபிவிருத்திக்குரிய முயற்சிகளை எடுத்து அதனை நான் செய்வேன்.

தற்போது மக்களின் குறைகளை கேட்டு தகவல் திரட்டு படிவம் ஒன்று கொடுக்கப்படவுள்ளது விரைவில் மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும்.

ஜனாதிபதிஅவர்கள் மக்களின் காணிக்கு விரைவாக அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்தார் அது காணிபிடிப்பதும் காடுகளை அழிப்பதும் தொடர்பில் வழக்குகள் போடப்பட்டதால் முதலாவது வர்த்தகமானி அறிவித்தல் தற்காலிகமாக நிப்பாட்டியுள்ளார்கள்.

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் படி மக்களுக்கான காணி பத்திரம் கிடைக்கும் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆளும்கட்சியில் இருந்தார்கள். குறிப்பாக இப்போது எதிர்கட்சியில் இருக்கின்றவர்கள் இப்போது எதிர்கட்சியில் வந்தபோது தான் பல விடையங்கள் அவர்களுக்கு தெரிகின்றது ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு மக்களுக்கு பிரச்சனைகொடுக்கும் மாதிரியான கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்கள் அவர்கள் கடந்த காலத்தில் என்னத்தினை செய்தார்கள்.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர்களுடன் பிரதமருடன் பேசியுள்ளோம் மக்களின் தேவைப்பாடுகளை அடையாளப்படுத்தியுள்ளோம் மக்களின் குறைகளை தெரியப்படுத்தும் முறைகளில் தெரியப்படுத்த வேண்டும் அதனை அரசியலாக்கக்கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகேள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்