Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

பதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ்

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை உலுக்கிய கொரோனா, தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து...

பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி..

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ்...

ஆடை விற்பனையக வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி

நீர்கொழும்பு- மாநகர சபை அங்காடி கடைத்தொகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம்‌ அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்‌ அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும், உணவுப்‌ பொருட்கள் விற்பனை செய்யும்‌ வர்த்தக நிலையங்கள்‌ மற்றும்‌ மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் பராமரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று...

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

டெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ளல் வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் தற்போது யாழ்...

ஆசிரியர்

வெற்றிபெற்றுள்ள முழு அடைப்புப் போராட்டம்

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளது.

இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் இன்று மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும்,

போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம் உயிநீத்துள்ளனர். இன்னும் நாம் விடுதலை பெறவில்லை.

இவ் வரலாற்றுக் காலத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்தும் ஈழமக்கள் கண்ணீர்விட்டழுதும்,

ஆறுதல் பெறுவது தமிழ் உறவுகள், தமிழ் மக்களின் பாரம்பரியம் இவை தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகமாகும்.

உலகில் இத்தகைய மனிதாபிமானக் கடமைகள் உயிரிழந்தவர்களை நினைவு கூரும்; கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும்.

உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் இறந்தவர்கள் நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வரும் நிலமை தான் இருக்கின்றது.

மனித குலம், தமிழ் உறவுகள் தம் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டழுது சாந்தி பெறும் இயல் உணர்வுகளைக் கூட, மனிதாபிமானக் கடமைகளைக் கூட இன்றைய கோத்தபாய அரசு மறுத்து வருகிறது.

இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்களில் எல்லாம் உறவுகளை நினைவு கூருவோருக்கு எமக்கும் பெயரிட்டு எதிராக முறையற்ற வழக்குகளைப் பதிவு செய்து தடையுத்தரவுகளை காவல்துறையினர் வழங்குகின்றனர்.

வடக்கு கிழக்கு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்களுட்பட நூற்றுக்கணக்கானவர்கள் தடையுத்தரவின் பேரில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

அரசின், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அடிப்படையுரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும்,மனிதாபிமான கடமைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஐ.நா. சாசன உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும்.

இதனை நாம் எதிர்க்க வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். மனிதகுலத்திற்குரித்தான, தமிழ் மக்;களுக்குரித்தான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நாம் ஒன்று திரண்டு ஜனநாயக வழிகளில் போராட வேண்டும்.

இந்நிலமைகள் தான் 1987 செப்டம்பரில் காந்திய வழியில் உண்ணா நோன்பிருந்து 26ஆம் திகதி உயிரிழந்த திலீபனை நினைவு கூருவதிலும் இடம்பெற்றுள்ளது.

அவன் தியாகம் மகத்தானது. 1987 செப்டம்பர் 26ல் உயிரிழந்த திலீபன் நினைவு கூருவதற்கு அப்பால் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து அர்ப்பணித்த தமிழ் மக்களையும் நினைவு கூர நீதிமன்றத் தடைகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

இதுவே தமிழின அழிவிலிருந்து எஞ்சியுள்ள எம் தமிழ்க் குலம் எதிர்காலத்திலும் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சனையாகும். சவாலாகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இப்பொழுது 20ஆவது திருத்தச்சட்டவரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றும் தீவிரத்தில் உள்ளார். புதிய அரசியலமைப்பில் 20ஆம் திருத்தத்தை உட்படுத்த எண்ணுகிறார்.

19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் ஓரளவுக்கிருந்ததையும் அதனை நீக்கும் போது நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படும்,

சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சி ஏற்படும்.

தமிழ்த் தேசத்து மக்களின் அரசியல் ஆளும் உரிமை, ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள், மனிதாபிமானக் கடமைகளை இத்தகைய அரசொன்றில் எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்கமுடியாது.

பெரும் அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் தமிழ்த் தேச மக்கள் மூச்சு விடவோ கண்ணீர் விடுவதற்கக் கூட உரிமையற்றவர்களாகி விடுவோம். தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழினம் அழிந்து விடும் அபாயத்தையே எடுத்துச் சொல்கிறோம்.

இந்த அபாயத்தை எதிர்கொண்டதால் தமிழ்த் தேசியத்தைக் கொண்டியங்கும் பத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் கடந்த 18ஆம் திகதியன்று ஒன்று கூடி இழந்து போகும்,

ஜனநாயக அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் படி ஒரு வேண்டுகோளில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பினோம். இதுவரை பதிலில்லை.

அரசின் பொலிஸார் வடக்குக் கிழக்கு முழுவதும் பல நீதிமன்றத் தடைகளையும், நடவடிக்கைகளையும் எடுத்த போது அவற்றைத் தாண்டி,

கடந்த 26ஆம் திகதி காலை 8.00 மணியளவில் உணவு தவிர்ப்புப் போரட்டத்தை எங்கே நடத்துவது என்பதைத் தீர்மானித்தோம்.

நேற்றுமுன்தினம் சாவகச்சேரியில் கைது செய்யப்படுவோம் என்ற நிலையிலும் முழுநாளும் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தினோம்.

ஒற்றுமையினால் புதிய நம்பிக்கையைப் பெற்றோம். வெற்றியடைந்தோம். ஒரு குறுகிய இடைவேளையில் எல்லோரையும் அழைக்க முடியவில்லை.

இருப்பினும் அந்த உத்வேகத்தோடு அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகள் மற்றும்,

இறந்தோரை நினைவுகூரும் உரிமையை சட்ட உரித்தை நிலை நாட்டவும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் இன்று முழுக்கடையடைப்பு ஒன்றை அறிவித்தோம். அதற்கு வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பெரும் வெற்றியடைந்துள்ளது.

பத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த 19ஆம் திகதியன்று அரசிடம் எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கைகளை, இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை ஏற்க வேண்டும்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். இலங்கை ஜனநாயக சக்திகளிடமும் மக்களும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் எங்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

ஒரு குறுகியகால ஒழுங்கில் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும் முழுக் கடையடைப்பு நிகழ்வுகளையும் மக்களிடம்,

உலகம் முழுவதும் செய்திகளிலும், காணொளி மூலமும் கொண்டு சென்ற பத்திரிகையாளர்,ஊடகத்துறையினருக்கு நிச்சயம் எங்கள் நன்றிகள் உண்டு.

இந்தப் போராட்டங்களின் வெற்றிக்காக உழைத்த, பங்களித்த அத்தனை அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்க அமைப்புக்கள், பல நீதிமன்றங்களில் வழக்குகளே இடம்பெறாதளவுக்கு வழக்கறிஞர்கள் பங்களிக்கவில்லை,

ஆசிரியர்கள் குறிப்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமான அறிவிப்பு, மேலாக பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் அறிவிப்பும் பங்களிப்பும், பலதுறைகளின் கல்விச் சமூகம்,

இன்னும் தென்னிலங்கை ஜனநாயக முற்போக்குச் சக்திகள், முஸ்லீம்,மலையக அரசியல் தலைவர்கள், முஸ்லீம் வர்த்தக சமூகத்தினர், வேளாண் துறையினர், கடற்தொழில்துறையினர்,

போக்குவரத்துத் துறையினர், தனியார் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்ப்பித்து நிற்கின்றோம்.

இப் போராட்டங்களின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியே. தமிழ் மக்கள் நிச்சயம் எழுச்சி கொள்வர் என நம்புகின்றோம்.

மாவை.சோ. சேனாதிராசா
தலைவர், இ.த.அ.கட்சி
பத்துத் தமிழ்க் கட்சிகளின் சார்பில்

இதையும் படிங்க

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது...

அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை காலாவதியானது

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா....

குழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம்

இலவச வைஃபை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உங்கள் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் போதும் என சுவிட்சர்லாந்து நிறுவனம் விளம்பரம் செய்தது.சுவிட்சர்லாந்தை சேர்ந்த ட்விஃபி...

தொடர்புச் செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது...

அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....

மேலும் பதிவுகள்

மேலும் மூன்று இடங்களுக்கு தனிமைப்படுத்தல் அறிவிப்பு!

மத்துகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஓவிட்டிகல, பதுகம, நவஜனபதிய ஆகிய இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தொற்று...

இன்றைய ராசிபலன் 2020.10.14

மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு...

மாதந்தோறும் 1½ கோடி கொரோனா தடுப்பூசி தயாரிக்க ரஷியா முடிவு

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஷியா உருவாக்கி, அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசியை நவம்பர்...

நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

பெண்களுக்கு அடி வயிற்றில் மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1. கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும்...

ஊடகவியலாளர்களை தாக்கியவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக மாட்டார்கள்?

முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு பட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். பணத்திற்காக சோரம் போனவர்களென சமூகம்...

உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு அவசியமா

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது பராமரிக்கும் ஓர் உடல் செயல்பாடே உடற்பயிற்சி. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. நீங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம், உடல் பருமன்,...

பிந்திய செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

துயர் பகிர்வு