March 24, 2023 3:58 pm

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் திட்டமிட்டப்படி இன்று (செவவாய்க்கிழமை) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று முற்பகல் 10 மணியளவில் இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்