September 28, 2023 10:33 pm

திருமலையில் குளவி கொட்டி இளம் குடும்பஸ்தர் மரணம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

திருகோணமலை, வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று பனை மரத்தில் ஏறி பனை ஓலை வெட்டியபோது அதில் இருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியது எனவும், அவர் சிகிச்சைக்காகக் கதிரவெளி வைத்தியசாலையில் மாலை 3 மணியளவில் சேர்க்கப்பட்டு மேலதிக சிசிச்சைகளுக்காக மட்டக்களப்பு – வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் குறித்த விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்