December 7, 2023 7:52 am

கிழக்கு ஆளுநருக்கு எதிராகப் பௌத்த பிக்குகள் போராட்டம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

திருகோணமலை – இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொருலுகந்த ரஜமகா விகாரைக்குத் தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ – 6 பிரதான வீதியை வழிமறித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் அந்தத் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்று வந்த நிலையில் இது தொடர்பாகவும் பேசப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராகத் தமிழ் மக்களால் முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநரால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காலாகாலமாகத் தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிக்குள் விகாரை அமைதால் அது இன முறுகலை ஏற்படுத்தும் என்ற வகையிலும், இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்ற வகையிலும் தமிழ் மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் காரணத்தினாலேயே விகாரையின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்