யாழ்ப்பாணம், தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மாணவன் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்று ஊர்காவற்துறைப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில் அந்த மாணவனை இன்று கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.