September 22, 2023 6:27 am

குற்றவாளிகளைக் கைது செய்யுங்கள்! – மனோ வலியுறுத்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவத்தையும் ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு பிரச்சினையாகக் கருதி, விசாரித்து, குற்றவாளிகளைக் கைது செய்யுங்கள்.”

– இவ்வாறு சட்டம், ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸிடம் இன்று வலியுறுத்தினார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

தான் சொன்ன மாதிரி செய்வதாக அமைச்சர் தன்னிடம் உறுதியளித்தார் என்றும் மனோ எம்.பி. குறிப்பிட்டார்.

இது பற்றி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் தொலைபேசியில் தான் இன்று அறிவித்தார் என்றும் மனோ எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்