December 7, 2023 8:01 pm

மோட்டார் சைக்கிள் விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் சாவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
திருகோணமலை, பன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கோமரன்கடவெல பகுதியைச் சேர்ந்த அணில் சதுரசிங்க (வயது 53) என்ற நபரே உயிரிழந்துள்ளார் என்று மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோமரன்கடவெல பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் குறித்த நபர் கடமையை நிறைவு செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது பன்குளம் – 4ஆம் கண்டம் பகுதியில் வைத்து யானை வீதியைக் கடக்கையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்