December 10, 2023 12:52 am

தேர்தலைப் பிற்போட இடமளியோம்! – பஸில் திட்டவட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“உரிய காலத்தில் தேசிய தேர்தல்கள் நடைபெற வேண்டும். இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்த வருடம் நடைபெற வேண்டும்.

தேர்தலைப் பிற்போட்டு அதில் அரசியல் நடத்த எவருக்கும் இடமளிக்கமாட்டோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது. தேர்தல்களுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்