செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தவங்களில் மலர்பவள் | த. செல்வா

தவங்களில் மலர்பவள் | த. செல்வா

0 minutes read

எங்கோர் மூலையில் எப்போதோர் பொழுதில்
வந்து போகும் உந்தன் சிந்தனைப் பூவில் சந்தித்த விழிகளை திறந்து பார்க்கிறேன்

உந்தன் தவப் பயணம்
தவக்கால இயேசுவைப் போல
புனிதம் அப்பியது
நீ எனக்காக சிலுவை சுமக்கிறாய்
நான் உனக்காக சுமையையே சுமக்கிறேன்

சுமத்தல் ஒரு அரிய ஔடதம்
சுமத்தல் ஒரு ஆய கலை 64
சுமத்தல் ஒரு அக்னிப் பரீட்சை
சுமத்தல் ஒரு சுவாலை
சுமத்தல் ஒரு நிர்மலம்
சுமத்தல் ஒரு வேள்வி என்பேன்

வானம் கோடி நட்சத்திரங்களை வாடிச் சுமக்கையிலே
பாடி ரசிக்கிறான் புலவன்
பெண் பத்து மாதத்தை சித்தந் தேய்ந்து சுமக்கையில்
சும்மா பாடிப் பொழுதை அழிக்கிறான் ஆண்

சுமத்தலின் சூட்சுமத்தில்
நீயும் நானும் இரவோ பகலோ அல்ல
அதற்கிடையில் ஏதோவொன்று

இப்போதெல்லாம்
தாய்மைச் சுமையைவிட
பெரிதாகத் தெரிவதெல்லாம்
நினைவுச் சுமையே

மறக்கும் வரத்தை சிவனிடங் கேட்கையில்
நீ நினைக்கும் பூக்களால் அர்ச்சிக்கிறாயே
ஓ!
இதுதான்
தவத்தில் மலர்தலோ

த.செல்வா
இரவு 11.25
மலை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.