கொவிட்-19 தொற்று நோய் காலப் பகுதியில் ஸ்பைடர் மேன் உரிமையின் சமீபத்திய வெளியீடு, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை (£750m) வசூலித்த முதல் திரைப்படமாக மாறியுள்ளது.

அதேநேரம் ‘Spider-Man: No Way Home’ இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.
உலகளவில் 905 மில்லியனுக்கும் அதிகமாக அமெரிக்க டொலர் வசூலித்த, சீனத் தயாரிப்பான கொரியப் போர்க் காவியமான தி பேட்டில் ஆஃப் லேக் சாங்ஜினை முறியடித்து இந்த சாதனையை படைத்துள்ளது Spider-Man: No Way Home.
ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவால்கர் 1 பில்லியனுக்கும் அதிகமாக அமெரிக்க டொலர்களை வசூலித்த கடைசி திரைப்படமாக 2019 இல் பதிவானது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வேறு எந்த ஹொலிவூட் திரைப்படமும் அந்த பாக்ஸ் ஆபிஸ் மைல்கல்லை எட்டவில்லை.
இந் நிலையிலேயே வார இறுதியில், சமீபத்திய மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் திரைப்படமான ஸ்பைடர் மேன் உரிமையின் சமீபத்திய பதிப்பு உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் 1.05 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.