
கிளி மக்கள் அமைப்பால் முன்னேடுக்கப்படும் கற்பகா திட்டத்தின் கீழ் மாணவருக்கான 900 மரக்கன்று வழங்கலும் பாடசாலை வளாகத்தினுள் 89 மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வும் கிளி/ மகாவித்தியாலயத்தில் இன்று இடம் பெற்றது.
இதன் போது மரநடுகையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் விருந்தினர்கள் வலியுறுத்திப் பேசினர். அத்துடன் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அத்துடன் கிளிமக்கள் அமைப்பினரின் சமூக சேவையை பாராட்டியும் கெளரவித்தும் ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதனை கிளிமக்கள் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் கற்பகாதிட்டத்தின் ஒருங்கமைபாளருமான திரு விஜயன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பாடசாலை அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேளமாலிகிதன், கரைச்சி கல்விக் கோட்ட அதிகாரி சு. தர்மரத்தினம் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் திரு சோதிநாதன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.











