தை – திருமகளே வருக வருக ….
தைரியம் துணிவு சிறக்க வருக வருக ….
தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக ….
தைத்தியரை அழிக்க வருக வருக ….!!!
முற்றத்தில் கோலமிட்டு …..
முக் – கல் அடுப்பு வைத்து ….
முத்திரி விளக்கேற்றி …..
முக்குணத்தை அழிக்க …
முக்காலமும் சிறப்பாக அமைய ….
கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன்
தை- திருமகளே வருக வருக ….!!!
உன்னையே உயிராய் …..
உன்னையே தொழிலாய் ….
உன்னையே மூச்சாய் வாழும் ….
உன்னையே தெய்வமாய் …..
உழைத்து வாழும் உழவு விவசாயம்…
செழித்து வாழ என் உயிர் தாயே ….
தை- திருமகளே வருக வருக ….!!!
– கவிப்புயல் இனியவன்
நன்றி : யாழ்.காம்