செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு!

வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு!

0 minutes read

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சிறுவர்கள் வெளி சமூகத்தில் இருந்தே கொரோனா நோயால் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வகுப்பறையில் ஒரு குழந்தையிலிருந்து மற்றொரு குழந்தைக்கு நோய் பரவும் அபாயம் மிகக் குறைவு.

அதேநேரம் வயதான மாணவர்களிடையே இது அதிகரிக்கலாம். ஆனால் தற்போது குழந்தைகள் மத்தியில் நல்ல சூழ்நிலை உள்ளது.

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை இலவசமாகப் பெறலாம். இந்த வசதிகள் அனைத்தும் குழந்தைகளிடையே நோய் பரவுவதைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.