செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு மணிக்கு 60 மைல் வேகத்தில் சென்ற காரை கட்டுப்படுத்திய 13 வயது சிறுவனுக்கு தேசிய விருது!

மணிக்கு 60 மைல் வேகத்தில் சென்ற காரை கட்டுப்படுத்திய 13 வயது சிறுவனுக்கு தேசிய விருது!

1 minutes read

கார் ஓட்டிக்கொண்டிருந்த தனது தாயார் திடீரென மயக்கமடைந்த நிலையில், மணிக்கு 60 மைல் வேகத்தில் கட்டுப்பாடின்றி பயணித்த காரைச் சாதுரியமாகக் கையாண்டு, விபத்திலிருந்து மீட்டெடுத்த 13 வயது சிறுவனுக்கு இங்கிலாந்தின் மிக உயரிய தேசிய வீரதீர விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

Ebbw Vale நகரத்தைச் சேர்ந்த சாக் என்ற சிறுவனுக்கே, பிரைட் ஆஃப் பிரிட்டன் விருது (Pride of Britain Awards) வழங்கும் நிகழ்வில் ‘துணிச்சல் மிக்க குழந்தை’க்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹெர்போர்ட்ஷையர் பிராந்தியத்தின் ஏ40 நெடுஞ்சாலையில் மணிக்கு 60 மைல் வேகத்தில் வாகனம் பயணித்துக்கொண்டிருந்த போது, அவரது தாயாரான நிக்கோலா திடீரென நினைவிழந்தார். அந்த இக்கட்டான தருணத்தில் உடனடியாக செயற்பட்ட சிறுவன் சாக், வாகனத்தின் ஸ்டீயரிங்கைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வீதியின் மத்திய தடுப்புப் பகுதிக்குள் செலுத்தி நிறுத்தியுள்ளார். பின்னர் வாகனத்தின் இயந்திரத்தை அணைத்துவிட்டு, அவசர சேவைப் பிரிவான 999 இலக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த நிக்கோலா, தனது மகனின் சாதுரியமான செயற்பாடு குறித்து பெருமிதம் கொள்வதாகவும், அன்று அவன் மட்டும் இல்லாவிட்டால் தான் இந்நேரம் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மயக்கமடைவதற்கு முன்னர் நிக்கோலா காரின் வேகத்தைக் குறைத்து வீதியோர புல்வெளிப் பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதிலும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் டிரைவ் நிலையில் இருந்ததாலும், அவரது கால் எக்ஸிலேட்டரில் பதிந்திருந்ததாலும் வாகனம் மீண்டும் அதிவேகத்துடன் பிரதான பாதையை நோக்கி நகரத் தொடங்கியது.

வாகனம் தொடர்ந்து வேகம் எடுத்ததால் தாயை அழைத்துக் கதறிய சாக், தனது தாயார் கண்விழிக்க மாட்டார் என்பதை உணர்ந்ததும் உடனடியாக ஸ்டீயரிங்கைப் பிடித்து வாகனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.

நிக்கோலா சுமார் 7 நிமிடங்கள் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவருக்கு இரத்த அழுத்தம் மிகக் குறைவாக இருந்தமை வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அவசர சேவைப் பிரிவினருக்கு அழைப்பெடுத்த சிறுவன், வாகனத்திலிருந்த வழிகாட்டல் அமைப்பின் உதவியுடன் தமது இருப்பிடத்தை மிகத் துல்லியமாக அவர்களுக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் தாயாரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சாக் தங்களது உயிரை மட்டுமன்றி வீதியில் சென்ற பிற உயிர்களையும் காப்பாற்றியுள்ளதாக அவரது தாயார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இலண்டனில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், பிரபல கால்பந்து வீரர் ஜேக் கிரீலிஷ் இந்த விருதை சிறுவன் சாக்கிற்கு வழங்கி வைத்தார்.

மணிக்கு 60 மைல் வேகத்தில் சென்ற காரை கட்டுப்படுத்திய 13 வயது சிறுவனுக்கு தேசிய விருது!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.