சர்வதேச மேசைப்பந்தாட்ட அரங்கில் அசத்தி வரும் இலங்கையின் 11 வயதுடைய ‘குட்டிப்பையன்’ தாவி சமரவீர இந்த வருடம் சர்வதேச மேசைப்பந்தாட்டத்தில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் ஐந்தாவது சம்பியன் பட்டத்தை சுவீகரித்து இலங்கைக்கு பெருமையையும் புகழையும் ஈட்டிக்கொடுத்தர்.

இத்தாலி தேசத்தின் லிஞானோ சபியாடோரோவில் அமைந்துள்ள பெல்லா இத்தாலியா WTT விலேஜ் ஸ்போர்ட்ஸ் ஹோலில் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளையோர் தொடர் லிஞானோ 2026 போட்டியிலேயே தாவி தனது ஐந்தாவது சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.
அப் போட்டியில் அவர் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றியீட்டியதுடன் ஒரு செட்டில்தானும் அவர் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இறுதிப் போட்டியில் ஹொங்கொங் சைனா வீரர் ஹுய் சுன் ஷுன் என்பவரை 3 நேர் செட்களில் (11 – 2, 11 – 2, 11 – 6) வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை தாவி சமரவீர சுவீகரித்தார்.
இதற்கு முன்னோடியாக முதலாவது குழுவில் இடம்பெற்ற தாவி சமரவீர, தனது ஆரம்பப் போட்டியில் இத்தாலி வீரர் உம்பேர்ட்டோ பஃபிஜியை 3 நேர் செட்கள் (11 – 5, 11 – 6, 11 – 6) வித்தியாசத்தில் தாவி சமரவீர வெற்றிகொண்டார்.
இரண்டாவது சுற்றில் மற்றோரு இத்தாலியரான லெனார்டோ சென்டியை 3 நேர் செட்களில் (11 – 9, 11 – 6, 11 – 1) வெற்றிகொண்டு தாவி சமரவீர கால் இறுதிக்கு முன்னேறினார்.
கால் இறுதியில் மேலும் ஒரு இத்தாலி வீரரான ஜியாகோமோ ரீவாவை எதிர்கொண்ட தாவி சமரவீர அப் போட்டியிலும் 3 நேர் செட்களில் (11 – 5, 11 – 6, 11 – 6) வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
அரை இறுதியிலும் இத்தாலி வீரர் ஒருவரையே அவர் எதிர்கொண்டார்.
அப் போட்டியில் அலெஸ்ஸாண்ட்ரோ ரிஸ்ஸோவை 3 நேர் செட்களில் (11 – 7, 11 – 1, 11 – 4) தாவி சமரவீர வெற்றிகொண்டிருந்தார்.