செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ‘சிவலிங்கம் ஆரூரன்’ சிறைக்குள் ஓர் சிற்பி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

‘சிவலிங்கம் ஆரூரன்’ சிறைக்குள் ஓர் சிற்பி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

3 minutes read

‘இருட்டுச் சிறைக்குள் இலக்கியம் படைக்கும் சிவலிங்கம் ஆரூரன்’

பொண்ணும் பதவியும் புழுதிற்கு நிகர்…உன்னில் இருக்கும் ஓங்கார மாசக்தி ஓங்கி எழட்டும்….

விடுதலை என்றும் பற்றாய் வளரட்டும்…என ஈழப்போராட்ட அமைப்பு ஒன்றின் சத்தியப்பிரமாணம் தாயக மண்ணில் முழங்கிய காலம் பலருக்கும் நினைவிருக்கலாம்.

பதவிக்கும், சொகுசு வாழ்க்கைக்காகவும் அலையும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமது இளம் வாழ்க்கையை இந்த மண்ணுக்காக ஆகுதியாக்கியவர்களை தமிழர் தேசம் ஒருபோதும் மறவாது.

தனது இளமையை சிறையில் தொலைத்த தமிழ் அரசியல் கைதியான சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான 2022ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது

வழங்கப்பட்டதை தமிழ் கூறும் உலகே பெருமைப்படுகிறது.

சிறைக்குள்ஓர்சிற்பி:

2022ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

வடமராட்சி திக்கத்தினை சேர்ந்த ஒரு பொறியியல் பட்டதாரியான சிவலிங்கம் ஆரூரன் பேராதனை பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை ( Master degree ) தொடரும் போது கைது செய்யப்பட்டார். கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு பித்தளை சந்தியில் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தாபாய மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக சிவலிங்கம் ஆரூரன் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பதினாறு வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவரும் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதூரசாலை” என்ற நாவலுக்கு, இலங்கை அரசு ஆண்டுதோறும் நடத்துகின்ற இலக்கிய விழாவில் 2022 ஆம் ஆண்டுக்குரிய சிறந்த தமிழ் நாவல் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த பதினாறு ஆண்டுகளாக, இலங்கையில் பல்வேறு சிறைகளிலும் அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்து இவர் இதுவரை ஒரு ஆங்கில நூல் அடங்கலாக எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 2016 இல் இவர் இலங்கை அரசு வழங்கிய சிறந்த தமிழ் நாவலுக்கான அரச சாஹித்திய விருதைப் பெற்றிருந்தார்.

“ஆதூரசாலை” சிறந்ததமிழ்நாவல்விருது :

சிவ.ஆரூரன் அவர்கள் ஈழத்து நாவல் உலகிற்கு கிடைத்த அருமையான படைப்பாளி. சிறைக்கம்பிகளுக்குள் அவரது வாழ்வு முடக்கப்பட்டுள்ள போதிலும், சோர்ந்து விடாது தொடர்ச்சியாக சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதி வருகின்றார். எமது மண்ணின் மீதும் மனிதர்கள் மீதும் கொண்ட பற்று இவரது படைப்பாக்கங்களில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம். அநேகமான இவரது படைப்புகளில் சமூக சிந்தனையும் எதிர்கால நோக்கும் உச்சமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நாவலும் அவ்வாறானதொரு நாவலே. 

எமது மண்ணின் வைத்தியர்கள் பலர் போர்க்காலங்களில் எந்தவித ஆதாயத்தையும் கருத்தில் கொள்ளாது உயிர் ஒன்றை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கை மட்டுமே கருத்திற் கொண்டு செயற்பட்டு வந்தமையையும் அவர்களது அர்ப்பணிப்பான சேவையையும் கண்ணுற்று வந்த நாம் இன்று வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிகழ்வதைக் கண்ணுற்று வந்த நாம் இன்று வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிகழ்வதைக் கண்ணுற்று வருகின்றோம். ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? எமது வைத்தியர்கள் எங்கே? ஏன் இந்த வெளிநாட்டு மோகம்? எமது வைத்தியசாலைகள் சில ஏன் மூடப்படுகின்றன? என்பதற்கு இந்த நாவல் விடை பகிருகின்றவேளை, முடங்கிக்  கிடந்த வைத்தியசாலை ஒன்று புத்தாக்கம் பெற்று எழுச்சி அடைந்த கதையாக இந்நாவல் அமைகின்றது. 

கதை சொல்லல் முறைமை, சமூக நோக்கான சிந்தனைகள், பாத்திரவார்ப்பு, மொழிப்பிரயோகம் என்பவற்றால் இந்நாவல் உயர்ந்து நிற்பதோடு ஆரூரனின் எழுத்தின் வீச்சு உச்சம் பெற்று வருவதையும் இந்நாவல் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஆரூரனின் ஆறாவது நாவல் இது. இவரது ஏனைய நாவல்களும் பல விருதுகளைப் பெற்று வாசகர்கள் இடையே ஆரூரனின் தனித்துவமானதாக அமையப் பெற்றுள்ள நிலையில் இந்நாவலின் வருகை வாசகரிடையே மேலும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையை தருகின்றது.

சிவ.ஆருரனின் “யாழிசை”சமூகநாவல்

இனத்தின் வலியைச் சுமந்து சிறையில் துன்புற்று வாழும் இந்த நூலாசிரியரின் சிறைக்குள் இருந்து மலரும் இசையாக இந்த “யாழிசை”வெளிவந்துள்ளது.

சிறை வாழ்வில் இனி ஏது வாழ்வு என நொடிந்து துன்புறும் சிறை வாழ்வாளர்களிடையே சிறைக்குள் இருந்தாலும் எழுதுகின்ற  வேட்கையை எவராலும் பூட்டி வைக்க முடியாது என   மெய்ப்பித்திருக்கும் இவரின் எழுத்துகள்.

வன்னி மாவட்ட மாணவர்கள் சிக்கல்களை –  மையப்படுத்தியதாக நகரும் கதையில் ஆதிக்க வன்கொடுமையாளர் கோரப் பிடிக்குள் சிறைக் கம்பிகளுக்குள் இருந்து எழுதப்பட்டுள்ளது இப்புதினம். நானூறு பக்கங்களைக் கொண்ட இந்தப் புதினத்தில் வன்னி மண்ணின் அழகியலை வாழ்வியல் வலிகளைச் சமூக மாந்தர் வாழ்வியல் சுமைகளை வைத்து அழகாகக் கதை நகர்கின்றது. சிவலிங்கம் ஆரூரன்

மகசின் சிறைச்சாலையில் இருக்கும் போது எட்டு தமிழ் மொழிப் படைப்புகளையும் ஒரு ஆங்கில மொழிப் படைப்பையும் எழுதி சிறைக்குள் ஓர் சிற்பியாக தெறிக்கின்றார்.

The Innocent Victims :

இந்த நூலாசிரியரின் “The Innocent Victims” எனும் ஆங்கில நாவலை சிறைக்குள் இருந்து எழுதியுள்ளார்.

ஒரு விதவை தாய், அவர் வேலை செய்யும் இடத்தில் ஒருவர் அந்த தாய்

மீது காதல் கொண்டு மறுமணம் செய்து கொள்ளும் கதையை அடிப்படையாக கொண்டது. அதனூடாக மறுமணம் தொடர்பில் பேசியுள்ளார்.

சிவ.ஆருரனின் நாவல்கள் எவற்றிலும் அரசியல் இல்லை மக்களின் வாழ்வியலை பேசும் நாவல்கள். அவரது தமிழ் நாவலான யாழிசை நாவல் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டல பரிசினை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது,

இந் நாவலுக்கான விருதினை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனாவின் கைகளால் ஆரூரனின் தந்தை பெற்றுக்கொண்டார். அப்போது, ஜனாதிபதியிடம் தனது மகனை சிறையிலிருந்து விடுவிக்குமாறு மன்றாட்டமாக கேட்டுள்ளார். அதற்கு அப்போதைய ஜனாதிபதி சாதகமாக பரிசீலித்து முடிவெடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ஆனாலும் அவரது விடுதலை இன்னமும் சாத்தியமாகவில்லை.

சிறையில் உள்ள மகன் ஒரு எழுத்தாளனாக, அதுவும் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளனாக வருவான் என தந்தை கனவிலும் ஒருபோதும் நினைக்கவில்லை. தன் மகன் குடும்ப வாழ்வில் சிறப்பாக வாழுவான், கலாநிதி கற்கையை முடித்து கலாநிதியாக வருவான் என எதிர்பார்த்த தந்தையின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. விடுதலைக்காக ஏங்கி நிற்கும் இந்த தந்தையை போல, இன்னும் பல தமிழ் தந்தையர்கள் கண்ணீருடனேயே தம் வாழ்வின் அஷத்தமனத்தை சந்திக்கின்றனர் என்பது காலக் கொடுமையாகும்.

ஆனாலும், தமது இளம் வாழ்க்கையை இந்த மண்ணுக்காக ஆகுதியாக்கியவர்களை தமிழர் தேசம் ஒருபோதும் மறவாது. இந்த இளம் எழுத்தாளனையும் வரலாறு ஓர் நாள் விடுதலை செய்யும் எனும் நம்பிக்கைகளுடன்…..

ஆக்கியோன் ஐங்கரன்விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.