செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தென்னாபிரிக்க பேராயர் | டெஸ்மண்ட் டுட்டு | ஈழ ஆதரவுக் குரல் நிறவெறிக்கு எதிரான வீரர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

தென்னாபிரிக்க பேராயர் | டெஸ்மண்ட் டுட்டு | ஈழ ஆதரவுக் குரல் நிறவெறிக்கு எதிரான வீரர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

தென்னாபிரிக்க பேராயர்: டெஸ்மண்ட் டுட்டு

ஈழத்தமிழரின் உரிமைக்காய் ஒலித்த குரல் !

 நிறவெறிக்கு எதிராக போராடிய வீரர் !!

——————————————————

  கட்டுரையாளர்    – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சிங்கள அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்திய போரை நிறுத்தி மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என வலிறுத்தியவரும், ஈழத்தமிழரின் உரிமைக்காய் குரல் ஒலித்தவருமான

நிறவெறிக்கு எதிராக போராடிய வீரர்- டெஸ்மண்ட் டுட்டுவின் முதலாவது ஆண்டு 26/12/22 நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)

உலகெங்கும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் நிறவெறிக்கு எதிராகவும் போராடி வந்தவருமான நோபல் பரிசு பெற்றவரும்,

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) உலகளாவிய சின்னம் என்றும் சிறந்த தார்மீக மனிதன் என்று விவரிக்கப்பட்டவரே டெஸ்மண்ட் டுட்டு, தனது 90ஆவது வயதில், 26.12.2021 அன்று தனது குரலை நிரந்தரமாகவே நிறுத்திக்கொண்டார்.

ஈழத்தமிழர்களின்உரிமைக்குரல் :

சிங்கள அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்திய போரை நிறுத்தி மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என டெஸ்மன்ட் டுட்டு வலிறுத்தி வந்தார்.

தனது இறுதிக் காலம் வரை ஒடுக்கப்பட்ட இனங்களுக்காக அவா் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

மனித உரிமைகளுக்காகவும் உலக சமாதானத்துக்காகவும் தனது தள்ளாத வயதிலும் போராடிவந்த பேராயர் டெஸ்மன்ட் டுட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நீண்ட காலம் குரல் கொடுத்தவர்.

ஈழத்தமிழர்கள்மீது பௌத்த சிங்களப் பேரினவாதம் நிகழ்த்தியது யுத்தக் குற்றமல்ல; அது இனப்படுகொலையே என்று சர்வதேச அரங்கில் உறுதிபடக்கூறி நின்றார்.

உலக அமைதிக்கான குரலாக ஒலித்ததால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட டெஸ்மன்ட் டுட்டு தென்னாபிரிக்காவைத் தாண்டியும் பூமிப்பந்தில் எங்கெல்லாம் மனிதம் வதைபடுகின்றதோ அங்கெல்லாங்கூட அட்டூழியங்களுக்கு எதிரான ஒரு உலகின் முகவரியாகத் திகழ்ந்தார்.

உலகின்முகவரியாகதிகழ்ந்தவர் :

பேராயரான டெஸ்மன்ட் டுட்டு மனிதம் என்பது இனம், மதம், மொழி என்ற எல்லைகளைக் கடந்த ஓர் உயரிய மாண்பு என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். இதனால், இஸ்ரேலிய யூதர்களால் பாலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுக்கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பி வந்தார்.

ஈராக் மீது பொய்க் காரணங்கள் கூறிப் போர் தொடுத்தார்கள் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயர் இருவரையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி வந்தார்.

நீண்ட காலமாக நிறப்பாகுபாட்டை சமாதானமான முறையில் தீர்த்து, நிறவெறிக்கு எதிராக போராடிய முன்னாள் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு 2021 டிசம்பர் 26 அன்று தனது 90வது வயதில் காலமானார்.

வன்முறையற்றஎதிர்ப்புபோராட்டம்:

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் மக்கள் முன்னணி அரசியலில் ஒரு முக்கிய நபரான டுட்டு, அவரது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஆசிரியரான பின்னர், 1961 இல் பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் ஆறு ஆண்டுகள் பிரிட்டனில் படித்து, புகழ்பெற்ற புனித ஒழுக்கத்தை வளர்த்துக் கொண்டார். தென்னாபிரிக்காவுக்கு திரும்பிய அவர், தேவாலயப் படிநிலையின் மூலம் உயர்ந்து 1978 இல் தென்னாபிரிக்க தேவாலய சபையின் பொதுச் செயலாளராக ஆனார்.

1980 களில் கறுப்பின இளைஞர்களுக்கும், தென்னாபிரிக்க படையினருக்கும் இடையே அதிகரித்துவரும் உயிராபத்தான மோதல்களுக்கு மத்தியில் வன்முறையைப் பயன்படுத்துவதை எதிர்த்து, நிறப்பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியாக வன்முறையற்ற எதிர்ப்புகளையும் சமரசத்தையும் டுட்டு ஏற்றுக்கொண்டு அதற்காக பணியாற்றினார்.

அத்துடன் வன்முறையற்ற ஜனநாயக மாற்றத்தை கொண்டு வருவதற்கு வெளிநாடுகளின் அழுத்தத்தை பிரயோகிக்கும் வழிமுறையாக தென்னாபிரிக்கா மீதான புறக்கணிப்பு மற்றும் தடைகளை அவர் ஆதரித்தார்.

ஜனநாயகப்புரட்சியின்காவலர்:

ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கு நெருக்கமாக இருந்த டுட்டு அதன் அரசியல் முன்னோக்கு நிறப்பாகுபாட்டிற்கு முடிவிற்கு கொண்டுவருவது ஒரு ஜனநாயகப் புரட்சியை மேற்கொள்ள பணியாற்றினார்.

நிறவெறிக்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுப்பதற்கு முன்னராக ஒரு தனித்த மனிதனாக அவசியமான அறிவுறுத்தலாக வன்முறையற்ற போராட்டத்துக்கு வழிசமைத்தவர் டுட்டு.

அதே வேளை ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நோக்கம் தனது வெள்ளை இன மக்களுடன் இணைந்து குறைந்த பொருளாதார பலத்தைக் கொண்டிருந்தாலும் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு கறுப்பின முன்னோடி அரசை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சியின் கொள்கையை முன்னெடுத்தது. அது அடிப்படையில் அன்றைய முதலாளித்துவ அரசு அமைப்பை அரசியல் சீர்திருத்தம் செய்யும் ஒரு வேலைத்திட்டமாகும்.

இந்த நோக்கத்திற்காக அவர்கள் தென்னாப்பிரிக்காவிற்குள்ளேயே

அனைத்து வர்க்கங்களை இணைத்து முற்போக்கு அரசை –

கூட்டணி அரசாக உருவாக்க முற்பட்டனர்.

இவை அனைத்தும் கறுப்பினத் தொழிலாள வர்க்கத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட கட்டுமானங்களாகும்.

சர்வதேசஅங்கீகரிக்கப்பட்டபிரதிநிதி:

 நிறப்பாகுபாட்டு எதிர்ப்பு இயக்கத்தின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளில் ஒருவரான டுட்டு

அமெரிக்க மார்ட்டின் லூதர் கிங்குடன் ஒப்பிடப்பட்டார்.

1984 ஆம் ஆண்டில், தென்னாபிரிக்காவில் நிறப்பாகுபாட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பிரச்சாரத்தில் ஒரு ஐக்கியப்படுத்தும் அவரது பங்களிப்புற்காக டுட்டுவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கறுப்பினபெரும்பான்மைஆட்சிமாற்றம்:

பெப்ரவரி 1990 இல், தென்னாபிரிக்க அதிபர் டி கிளார்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் மீதான தடையை நீக்குவதாக அறிவித்தார். நிறப்பாகுபாட்டு மற்றும் வெள்ளை சிறுபான்மை ஆட்சியின் முடிவிற்கு சைகை காட்டினார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், ஆளும் தேசியக் கட்சி மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு இடையே பெரும்பான்மை ஆட்சிக்கு மாறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் உரையாசிரியராக டுட்டு முக்கிய பங்கு வகிக்க வேண்டியிருந்தது.

மண்டேலாவுக்குவிடுதலை:

27 ஆண்டுகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், மண்டேலாவுக்கு நம்பகமான வழித்தடமாக டுட்டு மிகவும் பயனுள்ளவராக இருந்தார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில மாதங்களுக்குள், மண்டேலா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, நியூயோர்க் நகரம் மற்றும் பொஸ்டனில் வெகுஜன பார்வையாளர்கள் முன்னிலையில் பேசினார்.

வானவில்தேசம்உருவகம்:

டெஸ்மன்ட் டுட்டுவின் ‘வானவில் தேசம்’ என்ற உருவகம் தமது வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகளை வெளிப்படுத்தியது. மண்டேலா மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைமையிலான நிறப்பாகுபாட்டிற்கு பிந்தைய ஆட்சிக்கான அரசியல் முழக்கத்தை இவ் உருவகம் வழங்கியது.

அதிகாரத்தை எடுத்துக் கொண்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வங்கிகள், சுரங்கங்கள் மற்றும் பெரிய தொழில்களை தேசியமயமாக்கும் வாக்குறுதிகளை அளித்தது.

சர்வதேச நாணய நிதியத்துடன் தடையற்ற சந்தைக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் தென்னாபிரிக்காவை சர்வதேச மூலதனத்திற்கு திறப்பதற்கும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

நல்லிணக்கஆணையதலைமை:

நிறப்பாகுபாட்டிற்கு பின்னர் டுட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் (TRC) தலைவராக இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு

உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய சேவை செய்தார்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த மண்டேலா, ஆணைக்குழுவின் தலைவராக டுட்டுவை தேர்ந்தெடுத்தார். 1996 இல் அமைக்கப்பட்ட அதன் நோக்கம், நிறப்பாகுபாட்டின் கீழ் பல்லாயிரக்கணக்கான கறுப்பினத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மரணம் மற்றும் சித்திரவதைகளுக்கு காரணமானவர்கள் மீதான விசாரணைகளுக்கான பரந்த கோரிக்கைகளை முன்னெடுப்பதாகும்.

அதிபர் டி கிளார்க் மற்றும் அவரது தேசியக் கட்சி முதலில் நிறப்பாகுபாட்டின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்கு பொது மன்னிப்பு கோரியது. அப்போது பாதுகாப்புப் படைகள் கலகம் செய்யும் என்று அச்சுறுத்தியது. பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஒரு சமரசத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

 1998 இல் வெளியிடப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் ஐந்து-தொகுதி அறிக்கையில் வெள்ளை இன அரசால் இனவெறி கொடூரமாக திணிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. நிறப்பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆபிரிக்க தேசிய காங்கிரஸை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான முடிவு தென்னாபிரிக்காவின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜனப் புரட்சியை நோக்கமாகக் கொண்டதாக, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் எடுத்த பாதை

வடிவமைக்கப்பட்டதாக எடுத்துரைத்தது.

சர்வதேசபுகழாரம்:

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) தலைவர் சிரில் ராமபோசா, டுட்டுவை ‘உலகளாவிய சின்னம்’ மற்றும் ‘சிறந்த தார்மீக மனிதன்’ என்று விவரித்தார்.

அவர் ஏழு நாட்கள் உத்தியோகபூர்வ துக்க அனுஸ்டானத்துடன் கேப் டவுனில் உள்ள செயின்ட ஜோர்ஜ் தேவாலயத்தில் இரண்டு நாட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அரசாங்க இறுதிச் சடங்கு 2021 டிசம்பரில் நடைபெற்றது.

நிறவெறிக்கு எதிரான போராட்டத்திலும், புதிய தென்னாபிரிக்காவை உருவாக்கும் போராட்டத்திலும் ஒரு முக்கியமான நபர் என்று விவரித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா டுட்டுவை ‘எனக்கும் இன்னும் பலருக்கும் ஒரு வழிகாட்டி, நண்பர் மற்றும் தார்மீக திசைகாட்டி’ என்று குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.