செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பரத் நடிக்கும் ‘லவ்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

பரத் நடிக்கும் ‘லவ்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

நடிகர் பரத் நடிப்பில் தயாராகி இருக்கும் ஐம்பதாவது படமான ‘லவ்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமான ஆர்.பி பாலா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் ‘லவ்’. இதில் பரத், வாணி போஜன், ராதாரவி, டேனியல் அனி போப், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைத்திருக்கிறார்.

லவ் வித் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்.பி. பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. பாலா மற்றும் கௌசல்யா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும்  28ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது நடிகர் பரத், நடிகை வாணி போஜன், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர். பி. பாலா, நடிகை ஸ்வயம் சித்தா, இசையமைப்பாளர் ரோனி ரபேல், நடிகர் டேனியல் அனி போப், படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ், ஒளிப்பதிவாளர் பி. ஜி. முத்தையா உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபற்றினர். இந்நிகழ்வில் பரத் நடிப்பில் தயாராகி இருக்கும் 50ஆவது திரைப்படம் இது என்பதால், அவருக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதன் போது பேசிய நடிகர் பரத், “இந்தத் திரைப்படத்தின் இறுதி 20 நிமிடம் பார்வையாளர்களை நிச்சயமாக கவரும். நானும் வாணி போஜனும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறோம். இந்த படத்தின் மூலம் கணவன்- மனைவி இருவருக்குள் எம்மாதிரியான புரிதல் வேண்டும் என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திரில்லர் திரைப்படம்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.