செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நீதியான விசாரணை வேண்டும் | விக்னேஸ்வரன்

கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நீதியான விசாரணை வேண்டும் | விக்னேஸ்வரன்

0 minutes read

இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சிறுமி வைசாலியின் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் மன வேதனையை தருகிறது.

நான் நீதிபதியாக செயற்பட்டவன் என்ற நீதியில் விசாரணை முடிவுறாமல் இவர்கள் தான் குற்றவாளி எனக் கூற முடியாது

தாதியர்களின் தவறே சிறுமியின் கை துண்டிக்க பிரதான காரணம் என செய்திகள் வெளியாகிய நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சிறுமி தனது கல்விக்காலம் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் மற்ற இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.