செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து பேச சஜித் பிரேமதாசவுக்கு அனுமதி மறுப்பு

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து பேச சஜித் பிரேமதாசவுக்கு அனுமதி மறுப்பு

1 minutes read

லாப்ஸ் எரிவாயு விலையை அதிக தொகையில் அதிகரித்தமை தொடர்பில் கதைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர் கூறிய விடயங்களை ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு சபைமுதல்வாரன   அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியதனால் சபையில்  கடும் தர்க்கம்  ஏற்பட்டது

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து. எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச,ஜனாதிபதி சபைக்கு வருகை தந்து வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் குறித்த விடயங்களை முன்வைத்த பின்னர், மறுநாள் இரவே    லாப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பினால் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச   பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட சபாநாயகர், அது தொடர்பில் கதைப்பதற்கு தற்போது அனுமதிக்க முடியாது.

அது ஒங்குப்பிரச்சினை அல்ல என்றார். அதனைத் தொடர்ந்து எழுந்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் இதுதொடர்பில் கதைப்பதற்கு  தற்போது முடியாது. அதனை முறையாக சமர்ப்பித்து உரையாற்ற வேண்டும் என்றார்.

இந்த சந்தர்ப்பத்தில், லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய இந்த கேள்விகளை ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குமாறும் சபை முதல்வர் சபாநாயகரிடம் தெரிவித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவர்,எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபை  முதல்வருடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை கவலைக்குரிய விடயம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.