இந்திய திரையுகின் பிரபல நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் – யஷ்- சாய் பல்லவி – ஆகியோர் முதன்மையான காவிய கதாபாத்திரத்தில் நடித்த ‘ராமாயணம் பாகம் 1’ திரைப்படம் – வெளியான முதல் வாரத்தில் இந்திய மதிப்பில் ஆயிரம் கோடி வசூலை ஈட்டியுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிரத்யேக போஸ்டருடன் அறிவித்துள்ளது.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி, தீபாவளி திருநாளை கொண்டாடும் வகையில் கடந்த ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான திரைப்படம் ‘ராமாயணம் பாகம் 1’. இத்திரைப்படம் வெளியான பிறகு வட இந்திய ஊடகங்கள் கலவையான விமர்சனங்களை முன் வைத்தாலும்… இத்திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்தது.
இத்திரைப்படம் வெளியான ஒரு வார காலத்தில் இந்திய மதிப்பில் ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளது. தொடர்ந்து பட மாளிகையில் வெற்றிகரமாக நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு… சர்வதேச அளவில் ரசிகர்களின் பேராதரவு தொடர்கிறது.
ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கிளப்பில் தயாரிப்பாளர் நமித் மல்கோத்ராவின் ‘ராமாயணம் பாகம் 1’ இணைந்திருப்பதால் படக் குழுவினரும், திரையுலக வணிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.