செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பங்களாதேஷ் புதிய பிரதமருக்கு சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற முடியும் | ரணில்

பங்களாதேஷ் புதிய பிரதமருக்கு சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற முடியும் | ரணில்

0 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷ் புதிய பிரதமர் முஹம்மத் யூனுஸை தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு யூனுஸால் முடியும் என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களை அங்கு தொடர்ந்து தங்கி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பங்களாதேஷின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய இலங்கை சகல வழிகளிலும் உதவுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பங்களாதேஷ் பிரதமர், சந்தர்ப்பம் கிடைத்தால் விரைவில் பங்களாதேஷுக்கு வந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.