செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோடியில் புரளும் திலித் | குறைந்த பணவரவில் ரணில்! | வேட்பாளர்களின் மாத வருமானம் எவ்வளவு?

கோடியில் புரளும் திலித் | குறைந்த பணவரவில் ரணில்! | வேட்பாளர்களின் மாத வருமானம் எவ்வளவு?

1 minutes read

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளர் திலித் ஜயவீர எனவும், குறைந்த மாத வருமானம் பெறும் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில்,

அதிக வருமானம் பெறும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் பட்டியலில் முதலாம் இடத்தை பிடித்துள்ள மௌபிம ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் ஆகும்.

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் பெறும் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆவார். அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஆகும்.

மூன்றாவது இடத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இடம்பிடித்துள்ளார். இவரது மாதாந்த வருமானம் 4 இலட்சத்து 54 ஆயிரத்து 285 ரூபாய் ஆகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 2 இலட்சத்து 95 ஆயிரத்து 681 ரூபாய் மாதாந்த வருமானத்துடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் காணப்படுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் மாத வருமானம் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 802 ரூபாய் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மாத வருமானம் 3 இலட்சத்து 17 ஆயிரத்து 786 ரூபாய் என்றும் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகேயின் மாத வருமானம் 3 இலட்சம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.