உலகிலேயே மிகவும் வயதான நபர், தனது 112 ஆவது வயதில் மரணித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் டின்னிஸ்வூட் (John Tinniswood) 1912ஆம் ஆண்டில் பிறந்தார்.
இரண்டு உலகப் போர்களையும் இரண்டு பெருந்தொற்றுகளையும் கடந்துவந்த இவர், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் உலகிலேயே மிகவும் வயதான நபர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார்.
நீண்ட ஆயுளுக்கு என்ன ரகசியம் என்று அப்போது கேட்டபோது.. “அதிர்ஷ்டம்தான் தேவை” என்றார் அவர். “அதிக நாளும் வாழலாம்… அகால மரணமும் அடையலாம்.. அது நம்முடைய கையில் இல்லை,” என்றும் அவர் கூறினார்.
ஜான் டின்னிஸ்வூட்டுக்கு ஒரு மகள், 4 பேரப்பிள்ளைகள், 3 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.