செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

9 minutes read

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் காதல் ஒழுக்கம் சார்ந்து பாடப்பட்டவையே மிகுதியாக உள்ளன. ஏனைய இலக்கியங்களிலும் பல காதல் பற்றிய உணர்வுகளின் பாடல்கள் உள்ளன. எமது சங்கத்தமிழன் காதல் எனும் உணர்வை ஒரு அறமாக மதித்த வாழ்வியலை இந்தப் பதிவினோடு நோக்கலாம்.

சங்க இலக்கியங்களில் காதல் என்ற சொல்லே இல்லை. “காமம்” என்றே குறிப்பிடப்படுகின்றது. காமம் என்பது உணர்வு சார்ந்த இன்பமாகும். இதை “அன்புடைக்காமம்” எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

ஐவகைத் திணை உடையது இந்த அன்புடைக் காமம். அகத்திணைகளான இந்த அன்பின் ஐந்திணைகள் அல்லது அன்புடைக் காமம் என்பது;
குறிஞ்சி- கூடலும், கூடல் நிமித்தமும்
முல்லை- மட்டஇருத்தலும், இருத்தல் நிமித்தமும்
நெய்தல் – இரங்கலும், இரங்கல் நிமித்தம்
மருதம் – ஊடலும், ஊடல் நிமித்தமும்
பாலை – பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ஆகும்.
அதை விட மேலும் இரண்டு அகத்திணைகள் உள்ளன. ஒன்று “பெருந்திணை” அதாவது பெருந்திணை என்பது பொருந்தாக்காதல். அடுத்து “கைக்கிளை”. இது ஒரு தலைக் காதல் ஆகும். இந்த பெருந்திணை, கைக்கிளை என்ற இரண்டு காதல் உணர்வுகளைப் பற்றிப் பெரிதாக பாடல்கள் இல்லை. ஏனென்றால் இவை அன்பின் ஐந்திணைக்குள் அடங்கவில்லை என்ற காரணம் புரிகின்றது. ஆக இந்த அன்பின் ஐந்திணைகளான அக உணர்வுகளைக் கொண்டு வெளிப்படுவதே காமம் எனப்படும். காமம் என்ற சொல்லுக்குப் பிற்காலத்தில் “பால் உணர்வு” மட்டுமே எனத் தவறான பொருளைப் புகுத்தி விட்டனர்.

இதிகாசங்களிலுயும் காப்பியங்களிலும் வர்ணனைகள் மிகுந்து மெருகூட்டித் “தெய்வீகக் காதல்” என்று காட்டப்படுகின்றது. ஆனால் சங்க இலக்கியம் என்பது மக்களுக்கு உள்ளத்திலெழும் உணர்வை உள்ளதை உள்ளபடியே சொல்வதே ஆகும் என்பதைக் காணலாம் .

திருவள்ளுவர் கூட காமத்துப் பாலில் காதல் என்ற சொல்லை மிகக் குறைவாகவே பயன்படுத்தி இருக்கின்றார். காமம் என்றே பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஆணும் பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அகவாழ்வு ஆகும். இதையே தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் முதன்மையாகக் காட்டுகிறது.

பெயர் குறியாப் பண்பு

உள்ளத்தில் எழும் தனிப்பட்ட மனிதனின் உணர்வு என்பதால் அந்த மனிதன் யார் அவன் பெயர் என்ன என்று வெளிப்படுத்தாது தலைவன் தலைவி எனவே அகத்திணைப் பாடல்கள் அனைத்திலும் வருகின்றது. புறத்திணை கூறும் வீரம் போன்ற பாடல்களில் மன்னர்களின் அல்லது தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. தொல்காப்பியர் தொடக்கம் எமது மூதாதையர்களின் பண்பட்ட வாழ்வியல் பண்பினை இதனூடாக நாம் காணலாம்.

எட்டுத்தொகை நூல்களில் ஆறு நூல்கள் காதல் உணர்வுகளை கூறும் அகத்திணை இலக்கியங்களே ஆகும். அதிலும் பிரிவு பற்றிப் பாடிய இலக்கியங்களே சங்க காலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.

காதல் ஒழுக்கத்தைத் தொல்காப்பியர் “களவு ஒழுக்கம்”, “கற்பொழுக்கம்” என இரண்டாகப் பிரிக்கின்றார். திருமணத்திற்கு முன்பு களவு ஒழுக்கமும், திருமணத்திற்குப் பின்பு கற்பு ஒழுக்கமும் நிகழும். இந்தக் களவு ஒழுக்கத்தில் தலைவன் தலைவியின் காதல் கைகூடுவதற்கு தோழியர் உதவுவர். காதல் ஒழுக்கத்தில் இருக்கும் தலைவன் தலைவிக்கு உதவிய தோழன் தோழி கூட அவர்களுக்கு காதல் ஏற்படும் பட்சத்தில் தலைவன் தலைவியாக இருந்திருப்பார்கள்.

வேலன் வெறியாட்டு

தலைவனுக்கும் தலைவிக்கும் காதல் ஏற்பட்டு பித்து பிடித்தவள் போலத் தலைவி இருக்கின்றாள். தலைவனைக் காணாத தலைவி அவனை நினைத்து உடல் உருகி மெலிந்து போகின்றாள். தாயானவன் அவளுக்கு என்னவோ நடந்துவிட்டது என நினைத்து முருகக் கடவுளை வேண்டி “வேலன் வெறியாட்டு” நிகழ்த்த சொல்வாள். வேல் கொண்டு வேலன் என்பவனும் விலங்குகள் பலியிட்டு நிகழ்த்தி அவளுக்கு பிடித்த பேய் ஓட்டுவான் அதாவது அவளின் நோயைப் போக்குவான் என்கிறது சங்க இலக்கியம்.

அறத்தொடு நிற்றல்

தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் காதல் கொண்ட உண்மையை உரியவர்க்கு உரியவாறு எடுத்துரைப்பது அறத்துடன் நிற்றல் ஆகும். அதாவது தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையை நிலை பெறச் செய்து கற்பு வாழ்வை மலரச் செய்வது தலைவி, தோழி, செவிலி, நற்றாய் போன்றோரின் வேலை ஆகும்.

மடலேறுதல்

தலைவன் தனது காதலை தலைவிக்கு காதலை உணர்த்தும் போது அவள் மறுக்க நேரிட்டால் பனை மடல் கட்டிக்கொண்டு தலைவியின் பெயரை கூறியவாறு ஊரெல்லாம் வலம் வருவான். இவன் மடலேறித் தன் பெயரைக் காற்றில் விடுவான் என அஞ்சி தலைவி தனது காதலை ஒத்துக் கொள்வதும் உண்டு. மடலறி வந்தும் தலைவி தனது காதலை தெரிவிக்காத பட்சத்தில் தலைவன் தன்னை மாய்த்துக் கொண்டதும் உண்டு .

உடன் போக்கு

இதனைக் “கொண்டு தலைக் கழிதல்” என்றும் கூறுவர். பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் எனத் தெரிந்தால் தலைவன் தலைவியை தன்னுடன் கூட்டிச் செல்வது உடன்போக்கு ஆகும்.

கற்பில் பிரிவு

திருமண வாழ்வின் பின்னர் பல காரணங்களால் பிரிவு ஏற்படுகின்றது. ஓதற்பிரிவு- படிப்பதற்காக பிரிவது என்றும், காவற்பிரிவு- நாடு காக்க செல்வது என்றும், பொருள் வயிற் பிரிவு- பொருளீட்ட பிரிவது, தூதிற் பிரிவு- பிறநாட்டு அரசரிடம் பகை தணிக்க தூது போவதற்காக பிரிவது என்றும் பல பிரிவுகள் இருக்கின்றன.

பெண் புலவர்கள் பலர் காதல் ஒழுக்கத்தையே பாடி இருக்கிறார்கள். வெள்ளிவீதியார் என்ற பெண் புலவர் அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர் என்ற பெருமைக்குள்ளாகின்றார். இவர் “காமம் மிக்க கழி படர் கிழவி” என்ற துறையில் பாடி இருக்கின்றார். அதாவது தலைவி காமம் மிகுதியால் கலக்கத்துடன் பேசுகிறாள். தலைவி தன் அன்பின் மிகுதியை அஃறிணைப் பொருளான சிறு வெள்ளாங்குருகிடம் தன் நிலையைத் தலைவனிடம் கூறுமாறு வேண்டுவதாக இவரின் பாடல் அமைகின்றது.

இப்போது “காமம்” என்ற சொல்லையே உச்சரித்தால் ஆகாது என்ற காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் சங்க இலக்கியங்களில் இச்சொல் மிகுதியாக வருகின்றது. அன்பின் நிறைவையே காமம் என அன்று அழைத்தனர். அன்று பகற் குறியிலும் இராக் குறியிலும் தலைவனும் தலைவியும் சந்தித்திருக்கின்றனர். வாயில் என அழைக்கும் பாணன், தோழி, பாங்கன் போன்றோர் அதற்கு துணைபுரிந்து அறத்தோடு வழிநடத்தி இருக்கின்றனர்.

சங்க காலம் முடிந்து சங்கம் மருவிய காலத்தில்
பக்தி இலக்கியங்கள் தோன்றிய பின் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலைப் பாடுவதை விடுத்து இறைவனுடன் உள்ள காதலை பாடத் தொடங்கி இருக்கின்றார்கள்.

பிற்காலத்தில் துரதிர்ஷ்டவசமாக,
சாதாரணமாக ஒரு பெண்ணும், ஆணும் காதலிப்பது நம் தமிழர் சமுதாயத்தில் ஒவ்வாத காரியமாக ஆகிவிட்டது.

இந்தப் பதிவு சங்க இலக்கியத்தில் மிகுந்து கொட்டிக்கிடக்கும் காதல் எனும் அற உணர்வை மேலும் மேலும் தோண்டிச் சுவைக்க வழி வகுக்கும் என நம்புகின்றேன்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 37 | பட்டினப்பாலை கூறும் புலிச் சின்னம் பொறித்த சுங்க முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More