கல்வி அமைச்சின் வழிகாட்டலில் விளையாட்டுத்துறை மற்றும் உடற்கல்வி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான மல்யுத்தம் போட்டியில் யாழ்ப்பாணம் சன்மார்க்க மகா வித்தியாலய மாணவி எஸ். கனிஸ்டா, வெண்கலப் பதக்கம் வென்று பாடசாலைக்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொத்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா வரலாற்றில் இப் பாடசாலைக்கு மல்யுத்தத்தில் கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்தம் போட்டி பண்டாரவளையில் அண்மையில் நடைபெற்றது.
அப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான 39 கிலோ கிராமுக்கும் 42 கிலோ கிராமுக்கும் இடைப்பட்ட எடைப்பிரிவில் பங்குபற்றிய எஸ். கனிஸ்டா மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இந்த மாணவிக்கு மல்யுத்தம் பயிற்சிகளை ஆர். ரமேஷ் வழங்கி வருகிறார்.

