செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா லெனின் பாண்டியன் | திரைவிமர்சனம்

லெனின் பாண்டியன் | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ்

நடிகர்கள் : தர்ஷன் கணேசன், ஸ்ரிதா ராவ், கங்கை அமரன், ரோஜா, போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன், யுகேந்திரன், ஷரவண சுப்பையா, ‘ஆடுகளம்’ நரேன், சுப்பு பஞ்சு மற்றும் பலர்.

இயக்கம் : D.D. பாலசந்திரன்

மதிப்பீடு : 2.5/5

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துரைராசு( கங்கை அமரன்) – சந்தனம் ( ரோஜா)  என முதிய தம்பதிகள் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்திற்கு அருகே உள்ள காவல் நிலையத்தில் தந்தையின் அகால மரணத்திற்காக கருணை அடிப்படையில் அவருடைய வாரிசான மாறவர்மன் ராஜ பாண்டியன்( தர்ஷன் கணேசன்) என்பவருக்கு காவல்துறையில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

முன் கோபம் அதிகம் உள்ள மாறவர்மன் ராஜபாண்டியன் அவருடைய தொழிற்சார்ந்த வாழ்க்கையில் அவமானத்தை எதிர்கொள்கிறார். இதனால் பணியில் இருந்து விலகி விட தீர்மானிக்கும் போது, அவருடைய காதலி ‘பொறுமையாக இரு’ எனக் கூறுகிறார்.

இதனால் காதலி மீதும் வெறுப்பை கக்கும் அவருக்கு, நீதிமன்றம் துரைராசு எனும் முதியவரை ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடுகிறது. இதற்காக ஆயுதம் ஏந்தி துரைராசுவை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகிறார் ராஜவர்மன். அவரை பாதுகாப்பது ஏன்? என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்ளாத ராஜவர்மன், அதன் பிறகு அந்த முதியவர் யார்? அவர் யார் மீது எம்மாதிரியான வழக்கை தொடுத்திருக்கிறார்? சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் ஆதிக்க சக்திகளின் தாக்குதலில் இருந்து துரைராசுவை காப்பாற்றினாரா ? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.

இதில் துரைராசு மணல் கொள்ளைக்கு எதிராக ஆதாரத்துடன் புகார் அளிக்கிறார். அந்த புகாரை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்- அவருக்கு விசாரணை முடியும் வரை பாதுகாப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதும் இந்த கதையுடன் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது.

மணல் கொள்ளை – காவலருக்குரிய பொறுப்பை அறிந்து கொள்ளாத தகுதியற்ற இளம் காவலர்- இந்த இரண்டு விடயங்களை முன் நிறுத்திய கதையை திரைக்கதையாக விவரித்து இருந்தாலும் படத்தில் விறுவிறுப்பு என்பது தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு ஏற்படுகிறது.

முதல் பாதியில் நீதிமன்ற காட்சியின் உரையாடலும் காட்சி அமைப்பும், அதன் பொருளும் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்குகிறது.

உரையாடல்கள் பல இடங்களில் கூர்மையாக எழுதப்பட்டிருப்பதால் கவனம் பெறுகிறது.

துரைராசு – சந்தனம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே பயணிப்பதால் பெரிதாக ஈர்ப்பு இல்லை. இருப்பினும் கங்கை அமரன் – ரோஜா ஜோடி ரசிகர்களை வசீகரிக்கிறது.

துரைராசு ஆயுதம் ஏந்தி போராடிய பிறகாவது, அவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலருக்கு காவல் பணி மீதான ஈர்ப்போ.. ஆர்வமோ. இல்லாமல் இருப்பது அந்த கதாபாத்திரத்தின் பலவீனத்தை உணர்த்துகிறது. இதனால் அவர் உச்சகட்ட காட்சியில் எக்சன் உணர்வுக்கு மாறினாலும் ரசிகர்களால் கைத்தட்டி ரசிக்க முடியவில்லை.

ராஜவர்மன் சுந்தர பாண்டியன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இருக்கும் சிவாஜி குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசான தர்ஷன் கணேசன்- தன் திரை தோற்றத்தில் முழுமையான நிறைவை வழங்குகிறார். அடுத்தடுத்த வாய்ப்புகளில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்.

நீதியரசராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான்- மணல் மாபியாவாக நடித்திருக்கும் யுகேந்திரன், அரசியல்வாதி ரத்னமாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் – காவல்துறை அதிகாரி உதயகுமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் போஸ் வெங்கட் – ஆகியோர் தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் மண்ணின் மணத்துடன் படைப்பு நோக்கத்தை ரசிகர்களிடம் இசையால் கடத்துகிறது. இதற்கு ஒளிப்பதிவும் பக்க பலமாக திகழ்கிறது.

கதையை திரை மொழியில் சொல்வதில் சில போதாமைகள் இருந்தாலும், மணற் கொள்ளையின் எதார்த்தமான பின்னணியை இயக்குநர் உணர்வுபூர்வமாக விவரித்திருந்தாலும், அதற்கான தற்காலிக நிவாரணம் என எதையும் குறிப்பிடாதது குறைதான்.

லெனின் பாண்டியன் – சிங்கிள் சல்யூட்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.