செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனநாயகத்தையும் அதிகாரப் பகிர்வையும் பாதுகாக்க 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைய வேண்டும் | சஜித்

ஜனநாயகத்தையும் அதிகாரப் பகிர்வையும் பாதுகாக்க 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைய வேண்டும் | சஜித்

1 minutes read

நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையும் அதிகாரப் பகிர்வையும் சீர்குலைக்க முயலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இலவச “நடமாடும் சட்ட ஆலோசனை சேவை” மற்றும் கிராமங்கள் தோறும் “ஜனநாயக மன்றங்கள்” அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்துக்கு ஜனநாயக வழிமுறைகளும், நடைமுறைகளும் பரிச்சயமானவை அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையும் சீர்குலைக்க முயற்சிக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான 3 முதன்மைத் துறைகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் சமநிலையை தற்போதைய அரசாங்கம் முற்றிலும் சிதைக்கப் பார்க்கிறது.

இலங்கையில் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தவறில்லை என்றும், ஐக்கிய இராச்சியம் போன்ற வளர்ந்த நாடுகளில் உயர்தத்தப்பட்டுள்ளதை சான்றாக சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், ஐக்கிய இராச்சியம் போன்ற வளர்ந்த நாடுகளில் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முடிவுகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து தரப்பினருடனும் விரிவாக கலந்தாலோசித்து அனைவரின் கருத்து அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படுகிறது.

இலங்கையில் எவ்வித ஜனநாயகக் கலந்தாய்வுகளும் இன்றி முடிவுகள் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. எனவே, இன, மத, கட்சி அல்லது வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் அரசின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் உடனடியாக ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இதன் ஒரு பகுதியாக, கிராமங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டங்கள் மற்றும் தேசிய அளவில் ‘ஜனநாயக மன்றங்களை’ அமைத்து மக்கள் பங்கேற்புடன் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் வழிநடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயார் நிலையில் உள்ளது. இந்த மன்றங்கள் ஊடாக நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முழுமையாக கிடைக்கும் என அவர் உறுதியளித்தார்.

அத்துடன், வறுமை மற்றும் வசதியின்மை காரணமாகச் சட்ட ஆலோசனைகளைப் பெற முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் மூலம் இலவசச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் “நடமாடும் சேவை” அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவித்தார்.

சட்ட ஆலோசனைகளைப் பெற வழியின்றித் தவிக்கும் மக்களுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். அரசியலமைப்பின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகள் வெறும் சிவில் உரிமைகளுடன் நின்றுவிடாமல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படும் என்றும், அரசாங்கம் எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக மக்களாட்சிச் சக்திகளைத் திரட்டி ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வோம் என்று வலியுறுத்தினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.