செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மான்செஸ்டரில் முகமூடி அணிந்த கும்பலின் கத்திக்குத்துத் தாக்குதலில் 27 வயது இளைஞன் உயிரிழப்பு

மான்செஸ்டரில் முகமூடி அணிந்த கும்பலின் கத்திக்குத்துத் தாக்குதலில் 27 வயது இளைஞன் உயிரிழப்பு

1 minutes read

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் முகமூடி அணிந்த கும்பலொன்றினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் கொலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மான்செஸ்டர் நகரின் கிரம்ப்ஸால் (Crumpsall) பகுதியிலுள்ள மோஸ் பேங்க் (Moss Bank) வீதியில் நபரொருவர் பலத்த கத்திக்குத்துக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, அதிகாலை 01:30 மணியளவில் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த குறித்த இளைஞன், அம்பியூலன்ஸில் ஏற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருப்பு நிற ஆடைகளையும் முகமூடிகளையும் அணிந்திருந்த சில ஆண்களால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் ஆஷ் ட்ரீ வீதியை (Ash Tree Road) நோக்கித் தப்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஊடாக அவர்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துயரமான நேரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள துப்பறியும் பரிசோதகர் நீல் ஹிக்கின்சன் (Det Insp Neil Higginson), இளைஞனின் உயிரைப் பறித்த இத்தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் துயரமானது எனவும் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்களுக்கு உறுதியளித்த அவர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது விசாரணைகளுக்கு உதவக்கூடிய தகவல்களை அறிந்தவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலண்டனில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘KINGS OF GAANA 2026’ – நாளை முதல் நுழைவு சீட்டுகள் விநியோகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.