Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ராகவா லோரன்ஸ் அவரது சகோதரருடன் இணைந்து பயணிக்கும் ‘புல்லட்’

ராகவா லோரன்ஸ் அவரது சகோதரருடன் இணைந்து பயணிக்கும் ‘புல்லட்’

1 minutes read

நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு ‘புல்லட்’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘டைரி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘புல்லட்’. இதில் ராகவா லோரன்ஸ், எல்வின், வைஷாலி ராஜ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. கதிரேசன் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதன்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ்குமரன், தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே ‘புல்லட்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கும் எல்வின், அவரது சகோதரரான ராகவா லோரன்ஸுடன் இணைந்து ‘காஞ்சனா 3’ படத்தில் இடம்பெற்ற முகப்பு பாடலில் நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More