செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறையில் நாளை!

மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறையில் நாளை!

0 minutes read

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை (16)  காலை 10 மணிக்கு வல்வெட்டித்துறை, நெடியகாடு, கல்றோட் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்து சிவாஜிலிங்கம் 69 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை (14)  இரவு காலமானார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளதை தொடர்ந்து பகல் 12 மணியவில் வல்வெட்டித்துறை சந்தியில் அவரது பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,அஞ்சலி உரைகளும் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.