Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் அண்டனி

இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் அண்டனி

1 minutes read

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையிசையுலகில் வெற்றி பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரும் ரசிகர்களை பிரத்யேகமாக சந்திக்கும் வகையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது வழக்கமான நடைமுறை. இசைத்துறையிலும் சாதனை படைத்திருக்கும் நட்சத்திர நடிகரான விஜய் அண்டனி தற்போது இசையமைப்பாளராக தன் பயணத்தை மீண்டும் தொடரவிருக்கிறார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்படவிருக்கும் மேடையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நட்சத்திர நடிகரும், பாடகரும், இசையமைப்பாளருமான விஜய் அண்டனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். செப்டம்பர் ஒன்பதாம் திகதியன்று நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிக்கு விஜய் அண்டனியின் இசையில் உருவான அனைத்து ஹிட் பாடல்களும் இடம்பெறும். இதனால்  அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய இசையில் வெளியான பாடல்களை ரசிக்கும் ரசிகர்களும் இந்த நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் விஜய் அண்டனி இசை நிகழ்ச்சி நடத்துவதாலும், அவருடைய இசை நிகழ்ச்சிகள் முன்னணி திரையுலக பிரபலங்கள் பங்குபற்றவிருப்பதாலும் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக மக்கள் திரளக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே விஜய் அண்டனியின் இந்த புதிய இசை பயணம்…அவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என அவரது தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More