Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா டிசம்பரில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’

டிசம்பரில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’

1 minutes read

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்: எனும் திரைப்படம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘பட்லாப்பூர்’, ‘அந்தாதுன்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ மெரி கிறிஸ்துமஸ்’. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பொலிவுட் நடிகை கத்ரினா கைஃப் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கெவின் ஜே பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் மற்றும் குழந்தை நட்சத்திரம் பாரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பொலிவுட் நடிகை ராதிகா ஆப்தே சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரித்தம் சக்கரபோர்த்தி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தோராணி, ஜெயா தோராணி, சஞ்சய் ரவுத்ரே,, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் நேரடியாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி என்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு பட குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரடியாக இந்தி மொழியில் பேசி நடித்திருப்பதாலும், இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நட்சத்திர பொலிவுட் நடிகை நடித்திருப்பதாலும், ‘மெரி கிறிஸ்மஸ்’ திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More