Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் வைட்டமின் சி நிறைந்த, உடல் எடையை குறைக்கும் சூப்

வைட்டமின் சி நிறைந்த, உடல் எடையை குறைக்கும் சூப்

1 minutes read

தேவையான பொருட்கள்:

சிவப்பு குடை மிளகாய் – 2

லக்சா பேஸ்ட் (laksa paste) – 150 கிராம்
மிளகு – தேவையான அளவு
மிளகு தூள்- தேவையான அளவு
உப்பு –  சுவைக்கேற்ப
வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 25 கிராம்
சமையல் கிரீம் (Cooking Cream) – 200 மிலி
தேங்காய் பால் பவுடர் – 200 கிராம்
வெண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடை மிளகாய்களை உப்பு, மிளகு மற்றும் கிரீம் ஆகியவற்றால் சீசன் செய்து, 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.

அதன் தோல் மற்றும் விதைகளை அகற்றி விட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.

சூப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருக்கியதும், வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் அரைத்த குடைமிளகாயைச் சேர்த்து, அதனுடன் லக்சா பேஸ்ட், தேங்காய் பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து, கொதிக்க வைத்து, மிதமானச் சூட்டில் வைக்கவும்.

உப்பு, மிளகு தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More