தென்கிழக்கு லண்டனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் வைத்து பெண் ஒருவரை உதைத்துத் தாக்கிய நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை தென்கிழக்கு லண்டன் பொலிஸார் நாடியுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் மாலை 6 மணியளவில் அப்பெண் ரயில் நிலையத்திற்குள் நடந்து கொண்டிருந்தபோது அந்நிய நபர் ஒருவர் அவரை அணுகி, அவரது காலை உதைத்துள்ளார்.
அவரது காலில் காயம் ஏற்பட்டது. மேலும், அந்நபரின் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தாக்குதல் நடத்தியவர் இன்றும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன், பெண் காயங்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், தென்கிழக்கு லண்டன் பொலிஸார், அடையாளம் காண வேண்டிய நபரின் சிசிடிவி படங்களை, இன்று வெள்ளிக்கிழமை (01) வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபரை அல்லது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், 61016 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ அல்லது 0800 40 50 40 மற்றும் 0800 40 50 40 என்ற எண்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.