Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மொட்டு விரியும் நேரம் | கவிதை | சுகி கணேசலிங்கம்

மொட்டு விரியும் நேரம் | கவிதை | சுகி கணேசலிங்கம்

1 minutes read

மனமெல்லாம் பரவசம்

கண்ணெல்லாம் ஆனந்தம்

கனவுகள் தோன்றுது

தாலாட்டு பாடுது

காரணம் தான் என்னவோ

சின்ன கண்ணன் வருகையோ!

.

வயிற்றினில் உன் உதைப்பு

கதைகள் பல சொல்லுது

நெஞ்சினில் உன் நினைப்பு

கற்பனையாய் மிதக்குது

இனம் புரியா மகிழ்வொன்று

நெஞ்சுக்குள் அடைக்குது

எம் வாழ்வின் அர்த்தத்தை

வானளவு உயர்த்துது

CheckBlood

தாயெனும் ஓர் பதவி

உன் வரவால் கிடைக்குது

இத் தாயின் நெஞ்சுக்குள்

உன் வரவு இனிக்குது

நன்றி சொல்லி பாடவா

உனை தாலாட்டி பாடவா……

.

– சுகி கணேசலிங்கம் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More