அரச இலக்கிய விருது விழாவில் உயிர்வாசம் நாவலுக்கு விருது

அரச இலக்கிய விருது வழங்கும் விழா 2020 இல் நாவல் இலக்கிய பிரிவில் விருது ‘உயிர்வாசம்’, நாவலாசிரியர் தாமரைச்செல்வி அவர்களுக்குவழங்கப்பட்டது. அதே பிரிவில்  ‘வலசைப் பறவைகள்’, நாவலாசிரியர் சிவ ஆரூரன் அவர்கள் சான்றிதழ் பெற்றார்.   

நானாவித இலக்கிய பிரிவில் ஆசை இராசையா அவர்களின் ‘விம்பம்’, ஓவியப் புத்தகம் விருதுபெற்றது. அத்துடன் அதே பிரிவில் சான்றிதழைப் பெற்று ‘கள்ளத்தோணி’, ஆசிரியர் என். சரவணனும் ‘யாழ்ப்பாண பொது நூலகம் – அன்றும் இன்றும், நூலாசிரியர் ரூபவதி நடராஜா அவர்களும் மதிப்பளிப்பு பெற்றனர்.

புலமைத்துவம் மற்றும் ஆய்வு சார் படைப்புக்களில் ‘யாழ்ப்பாணத் தமிழ் அகராதி’, ஆசிரியர் நடராசா சிறிரஞ்சன் விருது பெற்ற நிலையில் அதே பிரிவில் ‘ஈழத்துத் தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியம்’, ஆசிரியர் ஜெ. ஹறோசனா  சான்றிதழ் பெற்றனர். 

இதேவேளை, சிறுகதை இலக்கியப்பிரிவில் ‘ஒன்பதாவது குரல்’, சிறுகதை நூலாசிரியர் தாட்சாயணிவிருது பெற்றார். அதே பிரிவில்  ‘அப்பாவின் தோட்டம்’, சிறுகதை ஆசிரியர் மலரன்னை அவர்களுக்கும் மற்றும் ‘உணர்வுகள் கொன்றுவிடு’, சிறுகதை ஆசிரியர் நிவேதா உதயராயனும் சான்றிதழ் பெற்றனர்.  

கவிதைப் பிரிவில்  ‘சிலுவைகளே சிறகுகளாய்’, கவிஞர் மைக்கல் கொலின் சான்றிதழ்பெற்றார். மேற்படி இலக்கிய விருகளைப் பெற்ற நூல்களை ‘ஜீவநதி பதிப்பகம்’, ‘குமரன் பதிப்பகம்’ மற்றும் ‘மகுடம் பதிப்பகம்’ முதலிய ஈழப் பதிப்பகங்கள் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. 

ஆசிரியர்