செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கடலின் கை | த. செல்வா

கடலின் கை | த. செல்வா

0 minutes read

இருகாலும் கையும் அஃதே

காலிரண்டை கடலில் நுழை என்றாய்
நீராய் கால் உலகை உழுமென

உன் கை பிணையட்டும்
ஓசையாய் நாதம் நரம்பில் நம்பிக்கை சுடருமென

தகித் தலையும் நெஞ்சுள்
நீ யூற்றும் சொற்களால்
சோர்வு ஆவியாகிப் புரண்டது

வெறுமை வீங்கையில்
கற்பனை குஞ்சு பொரிக்கின்றன
வெறுமை அமைதியின் சரீரம்
வெறுமை ஆகாயத்தின் ஆத்மம்
வெறுமை கௌவும் காலும் கையும்
உன்னைத் தேடி கடலோடையில்
நீ நினைவின் தூரிகையாய் ஓவியமாகிறாய்

துயர்ப்படும் போதெல்லாம்
நடக்கிறேன்
நீந்துகிறேன்
தெருவும் தண்ணியும் திருப்பித் தாக்குவதில்லை உன்னைப்போல்

கவலை கௌவும் போதெல்லாம்
நீ தந்த இரு கைகளை விரிக்கிறேன்
பிறர் கேட்கிறார்கள் என்னவென
சொல்கிறேன் உன் வாயைச் சூடி

ஒன்று புன்னகை
இரண்டு நம்பிக்கை யென

காயங்கள் கரைந்த ஈழக் கடலில்
இப்போதுங் கால் நனைக்கிறேன்
இரண்டு கைகளைத் தாங்கியவனாய்

த.செல்வா – இரவு 9.27
உதய நகர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.