செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பொன் குலேந்திரன் நினைவாக

பொன் குலேந்திரன் நினைவாக

2 minutes read

அண்மையில் காலமாகிய பொன் குலோந்திரன் அவர்கள் வணக்கம் லண்டனுக்கு அனுப்பிய கவிதையை அவர் நினைவாக இங்கே மீள்பிரசுரம் செய்கிறோம். ஈழத் தமிழ் இலக்கிய பரப்பில் தன் எழுத்துக்களின் ஊடாக பங்களிப்பை செய்த பொன் குலோந்திரன் என்றும் மதிப்போடு நினைவுகூரப்பட வேண்டிய முக்கிய படைப்பாளியாவார்.

மக்களின் குமுறல்கள் | பொன் குலேந்திரன்

இலங்கை தீவின் மக்களின் மனங்கள் ,
விலைவாசிகள் மலை போல் உயர்வால்,
கடல் போல் கொந்தலிக்கிறது .
அரசின் திட்டமில்லா பொருளாதாரம்,
மத்திய வங் கியின் மதியற்ற செயாலால்,
மதிப்பற்று இலங்கையின் பணம் ,
செல்லாக் காசு ஆயிட்டு.
இதனால் மக்களின் குமுறல்கள்.

பொருளாதர வளர்ச்சிக்கு உதவாத,
தேவயற்ற அபிவிருத்தித் திட்டங்கள்.
தீவின் அரசை கடன் மேல் ,
கடன் வாங்க வைத்தது.
சீன அரசு வட்டிய்டன் கடன் கொடுத்து,
சீரழிய வைத்தது சுந்தரத் தீவை.

இனத் துவேச கொள்கையுடன்.
ஆட்சிக்கு வந்த பல அரசுகள்,
இன்று செய்வது என்ன என்று தெரியாது.
தனித்து நின்று உதவி தேடி தவிக்கிறது.
கொளரவம் என்ற தீவின் அகங்காரம்,
ஐ நா சபைடின் சொல் கேட்க தடுக்கிறது .
எத்திசையில் செல்வது என்று,
முடிவு எடுக்க கட்சிகள் மாகாநாடு,
ஒன்று கூடி நடத்த அரசின் முடிவு.
கட்சிகளுக்கிடையே கருத்து வேற்றுமையால்,
மாகாநாடு பிசு பிசுத்து போனது .
குடிக்க பால் இன்றி,
குழந்தைகளின் அழுகைகள் .
விவசாயதுக்கு உரமின்றி விவசாயிகளின் குமுறல்

இந்திய மீனவர்களின் ஊடுறுவல்கள்
வட மாகாண மீனவர்களிடம் குமுறல்கள்.
பரீட்சை எழுத் பேப்பர் இன்றி,
மாணவர்களின் குமுறல்கள் .
பயணிக்க வாகனம் இன்றி ,
பொது மக்களின் குமுறல்கள்
உணவு விலை வாசி உயர்வால்,
குடும்பங்க,ளின் இந்தியாவுக்கு பெயர்வுகள் .
போரில் காணாமல் போன தம் உறவுகளை தேடி
ஈழத் தமிழர்களின் குமுறல்கள்.
ஆர்மியின் காணி ஆக்கிரமிப்பை எதிர்த்து ,
காணி சொந்தக்காரர் களின் குமுறல்கள்.
வாழ்க்கைச் செலவு ஊயர்ந்ததினால்,
சம்பள ஊயர்வு கேட்டு தொழிலாளரின் குமுறல்கள்.
குமுறலில் முடிவு மக்கள் புரட்சியா?
என்பது ஒரு கேள்விக்குறி !

ஆக்கம் : பொன் குலேந்திரன்- கனடா

பொன் குலேந்திரன் ஆகிய நான்

இலங்கையில் உள்ள யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ்ப்பாணம் பரியோவான் (St John’s College Jaffna )கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்பு பட்டம் பெற்றவன். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய், அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவன். பின்னர் கனடா “டெலஸ்” (Telus) லை தொடர்பு ஸ்தாபனத்தில் சிரேஷ்ட முகமையாளராக (Senior Product Manager) கடமையாற்றி.ஓய்வு பெற்றவன.; பத்து வயது முதற்கொண்டே எனக்கு எழுத்தில் ஆர்வம் இருந்தது. கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறேன்;. ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளேன். பல இணையத்தளங்களுக்கும் எழுதி வருகிறேன். என் வெப் பக்கம்: Pon-Kulendiren.கமrnGenertaions – தலைமுறைகள். rnrnஇலங்கை தெயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவரின் கதையை ஆங்கிலத்தில் Generations என்ற பெயரில் நாவலாக வெளியிட்டுள்ளேன். Notion Press.com சென்னையில் அல்லது Amazon.in யில் வாங்கலாம்.rnrnபிரிட்டிஷ் அட்சி காலத்தில், கூலிகளாக இலங்கைக்கு கங்காணிகள் மூலம் வேலைக்கு அமர்த்தபட்டவர்கள். 1963 இல் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தில் ஆயிரக்கணக்கில்; இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டார்கள். இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு இத்தொழிலாளிகள். விரைவில் தமிழில் “தலைமுறைகள்” என்ற தலைப்பில் இந்நாவல் வெளிவரும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.