செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தெய்வங்கள் துயிலும் வீதியில் ஒரு இராணுவ வீரன் | சமரபாகு சீனா உதயகுமார்

தெய்வங்கள் துயிலும் வீதியில் ஒரு இராணுவ வீரன் | சமரபாகு சீனா உதயகுமார்

0 minutes read

நான் பாடசாலை போய் வரும்
உருத்திரபுர சாலை, அது

எங்கள் தெய்வங்கள் துயிலும், அந்த
புனிதவிடம் தாண்டும்
ஒவ்வொரு பொழுதிலும்
இடதுகரம்
இதயம் தொட
சிரம்தாழ்த்தி
சிறு எழுகை எழுந்து வணக்கம் சொல்ல வைக்கும்

இது எனக்குள்
இயல்பாகிப் போன
ஒன்றுதான்

இன்றும் அதேவழியால்
வருகிறேன்

அதே தலை வணங்கல்
அதே இடதுகரம் இதயத்தொடுகை செய்ய
அதே சிறு எழுகை எழுந்து
தெய்வங்களை வணங்கி
வீதி முன்னே
பார்வைகளை எறிகிறேன்

திடீரென முளைத்துக்கிடந்த
இராணுவ தடை வேலியோரம் நின்று
ஒரு பொடித்தரவளி
இராணுவீரன்
ஒரு சல்யூட் அடித்து
வழிவிடுகிறான் எனக்கு

எதிரிகளால்
ஆபத்தில்லை என்பது
உண்மைதான் போலும்

தன் வீட்டு
அடுப்பங்கரை பூனையை
விரட்ட
இந்தப் படையில்
சேர்ந்திருப்பான் போலும்…

அவனும்
அவன் குடும்பமும்
சுகமாய் வாழ
தெய்வங்களையே
வேண்டி நின்றேன்…

சமரபாகு சீனா உதயகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.